உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 கி.மீ., துாரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

அங்காளம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 கி.மீ., துாரத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போதிய இடமில்லாததால், 5 கி.மீ., துாரத்தில் நிறுத்திவிட்டு, இருளில் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.இரவு 11:00 மணிக்கு சிவவாத்தியங்கள் முழங்க அங்காளம்மன் ராஜாராஜேஸ்வரி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், பூசாரிகள், பக்தர்கள் தாலாட்டு பாடல்களைப் பாடினர்.தை அமாவாசை என்பதாலும், இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லுாரிகள், வங்கி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதாலும் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.இரவு 10:00 மணிக்கு பிறகு வாகனங்களை நிறுத்த மேல்மலையனுாரில் இடம் இல்லாததால் சிறுதலைப்பூண்டி. கொடுக்கன்குப்பம் ஆகிய கிராமங்களில் 2 முதல் 5 கி.மீ., துாரம் முன்னதாக வாகனங்களை நிறுத்தினர்.அங்கிருந்து இருளில் பக்தர்கள் மொபைல் போன் டார்ச் லைட் உதவியுடன் குழந்தைகளுடன் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சுவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை