உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணையம் வழியே புகார் அளித்தால் மின்னணு ரசீது வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் டி.ஜி.பி.,

இணையம் வழியே புகார் அளித்தால் மின்னணு ரசீது வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் டி.ஜி.பி.,

சென்னை: ‘ஆன்லைன்’ வாயிலாக, காவல் துறையில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு புகார் மனு ஏற்பு ரசீது வழங்கும் திட்டத்தை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் நேரடியாக போலீஸ் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்களை, சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அம்மனுக்கள் ஏற்கப்பட்டதற்கு சான்றாக, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக சேவை பதிவேடு ரசீது வழங்குவர். தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, ‘ஆன்லைன்’ வாயிலாக புகார் அளித்து, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு ரசீது பெறும், புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், நேற்று அளித்த பேட்டி: பொது மக்கள், இனி, காவல் துறையின் இணையதளமான, www.tn.police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., ரசீது பெற்றுக் கொள்ளலாம். இந்த ரசீது பெற்ற மூன்று நாட்களில், போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று, போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கலாம். அவர்கள், முதல்கட்ட விசாரணை செய்து, முறைப்படி சி.எஸ்.ஆர்., ரசீது வழங்குவர். எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய குற்றம் நடந்து இருந்தால், வழக்குப் பதிவு செய்வர். அதன்பின் கைது நடவடிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். மொபைல் போன், இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண, மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, இ – எப்.ஐ.ஆர்., எனும் மின்னணு முதல் தகவல் அறிக்கை பெறும் நடைமுறையும், விரைவில் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில், அரசியல் ரீதியான போராட்டங்கள், நடப்பு ஆண்டில், 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கொலைகள் ( ஜன., நவம்பர் வரை) 2022 | 1,4842023 | 1,4692024 | 1,3832025 | 1,3462026 (ஜன, – நவ., 15 வரை) | 1,306கொலைக்கான காரணம் | எண்ணிக்கை | சதவீதம்குடும்பத் தகராறு | 360 | 28.4சிறிய தகராறு / வாய்தகராறு | 290 | 22.9திருமணத்துக்கு மீறிய உறவு / முறையற்ற உறவு | 162 | 12.8மது போதையில் ஏற்பட்ட தகராறு | 167 | 13.2முன்விரோதம் | 89 | 7.0நிலம் / சொத்து தகராறு | 56 | 4.4காதல் விவகாரம் / பாலியல் காரணங்கள் | 55 | 4.3பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறு | 54 | 4.3இதர காரணங்கள் | 10 | 0.8ரவுடித்தனம் தொடர்பான கொலை | 11 | 0.9காரணம் தெரியவில்லை | 3 | 0.2தொழில் போட்டி | 4 | 0.3உள்நோக்கமும் இல்லாத மனநோய் சார்ந்த கொலை | 2 | 0.2அரசியல் கொலை | 2 | 0.2பாலியல் வன்கொடுமையுடன் மனநோய் சார்ந்த கொலை | 1 | 0.1ஜாதி ரீதியான முன்விரோதக் கொலை | 1 | 0.1

நடைமுறை சிக்கல்

பொது மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று புகார் அளித்தாலே, போலீசார் சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தின் ‘சர்வர்’ பழுது எனக் கூறி அலைய விடுகின்றனர். அதன்பின், சி.எஸ்.ஆர்., ரசீது வழங்குகின்றனர். திருட்டு வழக்கு உட்பட பெரும்பாலான வழக்குகளுக்கு, எப்.ஐ.ஆர்., போடுவதில்லை.சில புகார்கள் மீது, நீதிமன்றத்தை நாடித்தான், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டியுள்ளது. தற்போது இணையதளம் வழியே, சி.எஸ்.ஆர்., பெற்றாலும், மீண்டும் போலீஸ் நிலையம் செல்ல வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுப்பது சிரமம்தான். குற்ற வழக்குகளை குறைத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே, போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதற்கு டி.ஜி.பி., தீர்வு காண வேண்டும் என்பதே, பொதுமக்களின் விருப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை