உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கல்வி கொள்கையில் அரசியல் செய்யும் 3 மாநிலங்கள்; தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

தேசிய கல்வி கொள்கையில் அரசியல் செய்யும் 3 மாநிலங்கள்; தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் 3 மாநில அரசுகள் அரசியல் செய்வதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தின் முதல் ஆண்டில், கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு, நவீனமயமாக்கல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய இளைஞர்களுக்கு கல்வி எப்போதும் ஒரு முக்கிய தூணாகவும், முக்கிய ஈர்ப்பாகவும் இருந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் கற்றலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும். இந்த விவகாரத்தில் 3 மாநிலங்கள் அரசியல் செய்கின்றன. 5 முதல் 23 வயதுக்குட்பட்ட 30 கோடி மாணவர்களைக் கொண்ட இந்தியாவில், கல்வி சீர்திருத்தங்கள் என்பது மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய கல்விக் கொள்கையானது, தொழில்நுட்பத்தின் மூலம் பாரம்பரியத்தையும், எதிர்கால இலக்குகளையும் இணைக்கிறது. மாணவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் தேசிய கல்விக் கொள்கை, அவர்களின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

தாமரை மலர்கிறது
மே 27, 2025 23:16

மும்மொழி கொள்கையை பின்பற்றாத மாநிலங்களுக்கு முழுவதுமாக நிதியை நிறுத்துங்கள். அப்போது தான் ஏழை மாணவர்கள் ஹிந்தி கற்க வழி ஏற்படும்.


K.n. Dhasarathan
மே 27, 2025 21:27

தர்மேந்திரா பிரதான் சட்டத்திற்கு புறம்பாக நிதிகளை தடை செய்கிறார், இவர்தான் கல்வியில் அரசியல் செய்கிறார்.


Subramanian N
மே 27, 2025 21:42

அரசியல் செய்பவர் ஊழல் மன்னன் ஸ்டாலின். புதிய கல்விகொள்கையை ஏற்று கொண்டு கையெழுத்து போட்டது யார்?


GMM
மே 27, 2025 19:15

இந்திய தேர்தலில், உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மை முடிவு இறுதி. தேசிய கொள்கையில் பெரும்பான்மை மாநில முடிவு செல்லாது.? இது போல் மாநில அனுமதி பெற்று தான் மத்திய விசாரணை அமைப்புகள் செயல்பட வேண்டுமாம். ஒரே அரசியல் சட்டத்தில் இரு அரசியல் முடிவு எடுக்க வகை செய்வது பணக்கார வக்கீலின் வாதம்? வக்கீலின் வாத அடிப்படையில் நீதிபதி தீர்வு. இரு மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை பற்றி திராவிட கட்சிகள் தமிழக மக்களிடம் வாக்கு எடுக்க முன்வருமா? வரி பகிர்வு பிறழ் வாதம். மத்திய அரசின் துறை முகம், விமான, ரயில், தேசிய சாலை, தொலை தொடர்பு தான் ஒரு இடத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தமிழகம் வருவாய் ஈட்ட பிற மாநிலங்களின் முதலீடு பயன்பட்டது. அபிவிருத்தி அதிகம் உள்ள மாநில நிதி பகிர்வு நிறுத்தி, அபிவிருத்தி குறைந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.


ManiK
மே 27, 2025 19:03

அந்நிய மதத்தை திணிக்கும் தமிழ்நாடு திமுக அரசை விட மோசமான அரசு உலகிலேயே கிடையாது. ஹிந்தி திணித்தவர்களுடன் கூட்டணி, பிடிச்ச 3வது மொழியை படிக்கலாம்னு சொல்லும் பாஜக பாசிஸ்ட். என்னங்க இது நியாயம்??


அப்பாவி
மே 27, 2025 18:30

இந்தித் திணிப்பை எதிர்க்கும் வீர மாநிலங்கள்.


MUTHU
மே 27, 2025 20:52

என்னையா எதெற்கெடுத்தாலும் ஹிந்தி திணிப்பு தொந்தி திணிப்புன்னுக்கிட்டு. தேசிய கல்வி கொள்கையில் யார் எந்த மாநிலத்தில் படித்தாலும் ஒருங்கிணைந்து certificate கொடுக்கப்படும். இங்கே ITI படித்தாலும் அதனை இடையில் நிறுத்திவிட்டு அதனையே மகாராஷ்டிரா சென்று படித்தாலும் அந்த படிப்பு ஏற்று கொள்ளப்பட்டு certificate தரப்படும்.


தஞ்சை மன்னர்
மே 27, 2025 17:38

உங்க நரித்தனத்தை எதிர்த்தால் எரியுதோ


krishna
மே 27, 2025 18:23

ADI MUTTALUKKU ADHAAN THANJAI PICHAIKKARANUKKU PUDHIYA KALVI KOLGAI PURIYAADHU.


vivek
மே 27, 2025 19:33

உம்மை போன்ற கொத்தடிமை மண்டியிட்டு வரும் காலம் நெருங்கும் .


தஞ்சை மன்னர்
மே 27, 2025 17:31

நீங்கதான் வீரமான ஆளாச்சே சொல்லி பாரு பெயரை.. வரி பகிர்வை கொடுத்துவிட்டு மறுவேலையை பாருங்கள்


ஆரூர் ரங்
மே 27, 2025 18:44

UPA ஆட்சியில் கொடுத்த 32 சதவீதம் பங்கு போதும் ன்னு சொல்லுங்க ( சுருட்டல் மகன் மருமகன் வெறுத்துப் போயிடுவாங்க)


Krishnamoorthy
மே 27, 2025 17:30

மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய வேண்டும். சனாதன கொள்கை implement பண்ணணும்.


தமிழ் மைந்தன்
மே 27, 2025 17:16

டாஸ்மாக் ஊக்குவிப்பு திட்டம் தயாராக உள்ளது.


தமிழ் மைந்தன்
மே 27, 2025 17:15

இது தேவையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை