உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டிற்காக மூதாட்டி அலைக்கழிப்பு

ரேஷன் கார்டிற்காக மூதாட்டி அலைக்கழிப்பு

தேனி : ரேஷன் கார்டிற்காக தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த மதுரையம்மாள், 65, அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். இவரது மகனும், மருமகளும் குழந்தைகளை விட்டு விட்டு, வெளியூர் சென்று விட்டனர். மூன்று பேரக் குழந்தைகளையும், கூலி வேலை செய்து மதுரையம்மாள் காப்பாற்றி வருகிறார். ரேஷன்கார்டு கேட்டு கலெக்டர், தாலுகா அலுவலகத்தில் பல முறை மனு தந்துள்ளார். நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் சென்றவரை, தாலுகா அலுவலகம் செல்லுமாறு, ஊழியர்கள் கூறியுள்ளனர். அங்கு சென்றவரை, ரம்ஜான் என்பது தெரிந்தும், நாளை (நேற்று) கலெக்டர் அலுவலகம் செல்லுங்கள், என கூறியுள்ளனர். இதை நம்பி, விடுமுறை நாளான நேற்று, பேரக் குழந்தைகளுடன் கலெக்டரை பார்க்க, நீண்ட நேரம் அலுவலக வாசலில் காத்திருந்திருந்து திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை