உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதானியை முதல்வர் சந்தித்தாரா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது இதுதான்

அதானியை முதல்வர் சந்தித்தாரா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது இதுதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அதானியை முதல்வர் சந்திக்கவில்லை. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அமெரிக்க கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தப் புகாரில் தமிழக அரசு பெயரும் பகிரங்கமாக அடிபட்டுள்ளது. அதானி நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தொகைக்கு மின்சாரம் பெறுவதற்காக, தமிழக மின்சார வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ampsiq0r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமில்லாமல், அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாகவும், அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, முதல்வர் ஸ்டாலினும் கோபப்பட்டு பதிலளித்தார். இந்த நிலையில், அதானியுடன் முதல்வர் சந்தித்ததாக கூறப்படுவது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலதிபர் அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை. அந்தத் தனியார் நிறுவனத்துடன் தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சீர்குலைந்து போன மின்சார வாரியத்தை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் தலைநிமிர வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி, அடிப்படை உண்மை இல்லாத பொய்க்குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடல்ல.பிற மாநிலங்களைப் போல தமிழக மின்சார வாரியமும் மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளது. எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல. அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதானியின் 5 நிறுவனங்கள் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து தி.மு.க., ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பு பாதகமாக வந்ததால், அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ரூ.568 கோடி செலுத்த நேரிட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரியத்திற்கு சொந்தமான அனைத்து மின் நிலையங்களில் இருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையைப் பொறுத்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் பெறப்படுகிறது. இந்த அடிப்படை தகவல்களைக் கூட அறியாதவர்கள் போல அறிக்கைகள் விட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சியில் தான் என்பதை சிலர் அறியாமையில் உளறிக் கொட்டும் சில அறிக்கை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., அரசின் மீது வீண் பழி சுமத்தும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ, அ.தி.மு.க.,வையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள் தான் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது. அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Mohammad ali
டிச 07, 2024 07:57

அணில் 13ஆம் சூப் ஆவது oruthi


தாமரை மலர்கிறது
டிச 07, 2024 00:44

அடானியும் ஸ்டாலினும் நண்பர்கள் என்று ஊருக்கே தெரியும்.


Senthil Kumar
டிச 06, 2024 23:05

நேர்மையான அரசே எங்கே நீங்கள் வழக்கு தொடருங்கள் பார்க்கலாம், மருத்துவர் அய்யா உங்களிடம் கேள்வி கேட்டு ஒரு வாரம் கழித்து அமைச்சர் விளக்கம் கொடுக்கிறார்கள், உங்கள் நேர்மைக்கு 2026 இல் பதில் உண்டு..


தனி
டிச 06, 2024 21:59

தொறந்து சொல்லவேண்டியதுதானே??


Anantharaman Srinivasan
டிச 06, 2024 20:20

ஆம்..திமுக மிகவும் நேர்மையான அரசு. அவதூறு பரப்புவோர் மீது உடனே சட்டபூர்வமாக நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்.


தமிழன்
டிச 06, 2024 20:11

அமெரிக்க நீதி துறை மீது தமிழக அரசு வழக்கு தொடருமா..? இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?


Ganapathy
டிச 06, 2024 20:02

அமெரிக்க நீதிமன்றத்தின் மீதே வழக்கு போடுவாயா? நீ என்ன பெரிய அப்பாடக்கரா? அப்புறம் பெரிய தத்தியும் சின்னதத்தியும் அமெரிக்கா போகாம எங்ககிட்ட ஆட்டைய போட்ட கருப்பு பணத்தை பதுக்குறது? அப்படியே போனாலும் அவனுங்கள டைம் ஸ்கொயர்ல ஓடவிட்டு லாடம் கட்டாம விடுவானுகளா?


Murugesan
டிச 06, 2024 19:56

யோக்கியன் சொல்ல வந்துட்டான், அதானி சந்திப்பு நடந்த போது சிறை இருந்த,


Ganapathy
டிச 06, 2024 19:34

எலேய் நீ எப்படி மத்தியான மொதல்ல அப்டீன்னு உச்சநீதிமன்றம் கேட்டதுக்கு பதில் சொல்லு மொதல்ல. திருட்டுத்திராவிடியகளவாணிகழகமொக்கபொண்டுகபயலுக ஆட்சீல கேள்வி கேட்கும் குடிமக்களை மிரட்ட இவன் யார் மொதல்ல? அரசியல் சட்டம் கொடுத்த ஆட்சியாளனை கேட்வி கேட்கும் ஜனநாயக கருத்துச் சுதந்திரத்தை நம்மிடமிர்ந்து இவன் பறிக்க நினைக்கிறான்.


sankaranarayanan
டிச 06, 2024 19:04

அதாணியை முதல்வர் சந்திக்கவில்லையென்றால் அவரே முன்பே ஓர் அறிக்கை விட்டிருக்க வேண்டும் இப்போது காலம் கடந்து நிரூபணம் ஆகும் சமயத்தில் அதற்கு ஆதாரம் வேண்டும் என்று ஜாமினில் வெளிவந்த இவர் கூறுவது வேடிக்கையாகவே இருக்கிறது ஜூலை 10-ஆம் தேதி தமிழக கோட்டையில் சந்தித்ததாக முன்பே ஓர் அறிக்கை வெளி வந்தது அதற்கு யாருமே மறுப்பே தெரிவில்லை. விரைவில் அமெரிக்கா சொன்னதுபோல தமிழகம் ஆந்திரா - ஒடிசா - சாத்தகிஸ்கர் - இந்த மாநிலங்கள் அதானியிடமிருந்து எவ்வளவு யார் யார் பெற்றார்கள் என்றே விரைவில வெளிவரும் பொறுத்திருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை