உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; டி.ஐ.ஜி., பாதுகாவலருக்கு தொடர்பு

மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; டி.ஐ.ஜி., பாதுகாவலருக்கு தொடர்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, நான்கு போலீசார் கைதாகி உள்ள நிலையில், இக்குற்றத்தில், டி.ஐ.ஜி., ஒருவரிடம் பாதுகாவலராக இருக்கும் போலீஸ்காரருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.செயலி வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்ற, சென்னை அசோக் நகர் குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஜேம்ஸ், 35, அயனாவரம் போலீஸ்காரர் பரணி, 32, மற்றும் என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர்கள் ஆனந்த், 35, சபீர், 34, ஆகியோர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் ஜேம்சை, வடபழனி காவல் நிலைய போலீசார் ஏற்கனவே காவலில் எடுத்து விசாரித்து உள்ளனர். தற்போது, ஆனந்த்தை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.அப்போது, ஜேம்ஸ் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட போலீசார், மெத் ஆம்பெட்டமைன் விற்றதுடன், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த அசோக்குமார், 39, கே.கே.நகரில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் டாக்டர் கார்த்திக், 28, ஆகியோரிடம் பணம், நகை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்களுக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.இந்நிலையில், தங்கள் கூட்டணியில், சென்னையில், போலீஸ் டி.ஐ.ஜி., ஒருவரிடம் பாதுகாவலராக இருக்கும் போலீஸ்காரருக்கும் தொடர்பு இருப்பதாக, காவல் விசாரணையில், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி.,யின் பாதுகாவலர் குறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.போலீசார், ஆனந்த், ஜேம்ஸ், பரணி, சபீர் ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக, போதை பொருள் கடத்தலில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sridhar
டிச 17, 2024 12:43

A certain Nero is playing fiddle while TN is in doldrums. People are oblivious to happenings around them. They wake up on election day , take money and vote for criminals before going to sleep again.


sugumar s
டிச 17, 2024 11:15

All these types tasks cannot function in any where in world without the support and blessings of protection force. Beauty is they themselves are part of the game shows their real acteristics


Kanns
டிச 17, 2024 10:35

SHAME that Police Doing Crimes from Times Immemorial against People, Society, Nation, World. ALL DUE TO Commission Receiving Superiors Never Punishing Erring Police incl CaseHungry FalseComplaints. BETTER ABOLISH SUPERIOR OFFICERS


rasaa
டிச 17, 2024 10:13

அரசன் எவ்வழி, அவன் படைகளும் அப்படி


Barakat Ali
டிச 17, 2024 09:40

கங்கையே சூதகமானால்.. அதாவது மன்னரே இந்த பிசினஸில் ஆதாயம் பெற்றால் ????


Bala
டிச 17, 2024 09:28

வேலியே பயிரை மேய்கிறது.


karupanasamy
டிச 17, 2024 07:57

ஏதாவது படம் இயக்கிருக்கானு கண்டுபிடியுங்க


அம்பி ஐயர்
டிச 17, 2024 07:13

மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருள் விற்பதற்கு மொபைல் செயலி... ஆன்லைன் பேமெண்ட்..... ஆனால் ஸ்காட்லாண்டு யார்டுக்கு நிகராகக் கருதப்பட்ட நம்ம ஊரு போலீசோ........ அதைச் சொல்லவும் வேண்டுமோ.....


அம்பி ஐயர்
டிச 17, 2024 07:06

தினம் தினம் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது... காவல் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு.. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்குத் தொடர்பு.. இப்படி அரசுத் துறைகளையே தன் போதைப் பொருள் விற்பனைக்கு ஜாஃபர் சாதிக் பயன்படுத்தியிருக்கிறான்.... இதையெல்லாம் அவன் அரசியல்வாதிகள் துணையில்லாமல் செய்திருக்கவே முடியாது.... அந்த முதல் குடும்பத்து முக்கிய நபரைக் கைது செய்து விசாரித்தாலேயே பல உண்மைகள் வெளிவரும்.. ஆனால் போலீசாரோ டிவிட்டரில் பதிவு செய்தவர்களைக் கைது செய்வதில் தான் தன் திறமையைக் காட்டுகிறது...


RAMAKRISHNAN NATESAN
டிச 17, 2024 13:31

இம்சை அரசர், அவருடைய குடும்பம், பிரமுகர்கள், அடிமைகள், கூலிப்படையினர், லுங்கிபாய்ஸ் தவிர வேறு யாரும் வாழ முடியாத நிலை வரும் .... வேற ஜாகை பார்த்துண்டுட்டேளா ????


durai
டிச 17, 2024 06:45

The present state of Police Administration in Tamilnadu under the control of Chief Minister is clearly evident from the various news items published today.


புதிய வீடியோ