உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் செய்தி எதிரொலி: மாணவர்களை பாராட்ட நேரில் வந்தார் ராக்கெட் விஞ்ஞானி!

தினமலர் செய்தி எதிரொலி: மாணவர்களை பாராட்ட நேரில் வந்தார் ராக்கெட் விஞ்ஞானி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; தினமலர் நாளிதழில் ஜூலை 13ம் தேதி, 'பசுமை ரோபோ முதல் பாதுகாப்பு கருவி வரை' என்ற தலைப்பில், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் ரோபோட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்து, விரிவாக செய்தி வெளியானது.இந்த செய்தியின் அடிப்படையில், கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்க வந்த 'இஸ்ரோ' முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அந்த பள்ளிக்கு நேரில் சென்று, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து பாராட்டினார்.பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தையும் பார்வையிட்டு, மாணவர்களுடன் அறிவியல் தொடர்பாக கலந்துரையாடினார்.விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், “அறிவியல் ஆர்வத்திற்கு விதைப்பும் ஊக்கமும் பள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும். அரசு மற்றும் தன்னார்வலர்களின் இணைப்பில் அரசு பள்ளிகளில், 'ஸ்டெம் லேப்' அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய மாணவர் கண்டுபிடிப்புகள் வெளிவரும் போது, அது மற்ற பள்ளிகளுக்கும் ஊக்கமளிக்கும்,” என்றார்.

உற்சாகம்'

தலைமையாசிரியர் ஆனந்தகுமார் கூறுகையில், “கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், எங்கள் பள்ளி மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முன்னேற்றத்தைக் காட்டி வருகின்றனர். மாணவர்களின் முயற்சியை அறிந்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நேரில் வந்தது அவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
ஜூலை 17, 2025 12:39

நாளை இந்த பள்ளியிலிருந்து மயில்சாமி அண்ணாதுரை போன்று பலர் வர சாத்தியமிருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள். ராக்கெட் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி.


Sundar R
ஜூலை 17, 2025 11:32

மயில்சாமி அண்ணாதுரை ஒரு பெரிய திமுக சொம்பு என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.


அப்பாவி
ஜூலை 17, 2025 09:53

ரிடையரானா இது மாதிரி நிறைய வேலை இருக்கும்.


Naga Subramanian
ஜூலை 17, 2025 09:48

எப்பொழுதோ திராவிட விஞ்ஞானி ஆகிவிட்டார்


M.Ramakrishnan
ஜூலை 17, 2025 09:46

மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். மயில்சாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்


N Annamalai
ஜூலை 17, 2025 09:36

அருமை .மாணவர்களுக்கு பாராட்டுகள் .நன்றி மயில்சாமி அண்ணாதுரை அய்யா


முதல் தமிழன்
ஜூலை 17, 2025 09:24

இதெல்லாம் வேஸ்ட்


ASIATIC RAMESH
ஜூலை 17, 2025 08:47

செய்தி வெளியிட்ட தினமலருக்கு அதைப்பார்த்து மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நேரில் வந்து வாழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Subramanian
ஜூலை 17, 2025 07:31

வாழ்த்துகள்


புதிய வீடியோ