உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அ.தி.மு.க., மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி அறிவிப்பை அடுத்து தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க., முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்படி திண்டுக்கலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் கட்சியின் பொருளாளரும், மாஜி அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.இந் நிலையில் சென்னையில் உள்ள அவருக்கு திடீரென உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். அதில் செரிமான கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்து, அதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 15, 2025 12:38

ஒருவேளை அமலாக்கத்துறை அல்லது வருமான வரி சோதனை ஏதாவது நடக்கும் என்று இப்படி ஒரு நாடகமா?


சோழநாடன்
ஏப் 15, 2025 11:42

ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணியை அமைச்சரால் செரிமானிக்க முடியவில்லையோ. தெரியலையே. புரியலையே.....


Anantharaman Srinivasan
ஏப் 15, 2025 09:54

திண்டுக்கல் சீனிவாசனுக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். அதில் செரிமான கோளாறு காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை