உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

நன்றி சொல்ல வந்த இடத்தில் மக்களை திட்டித்தீர்த்த இயக்குனர் தங்கர் பச்சான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், 3வது இடம் பிடித்து தோற்றார். ஓட்டளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த அவர், 'எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு' என கோபமாக பேசியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5u6pekk4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் கடலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர். தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார். அப்போது திறந்தவேனில் நின்று அவர் பேசியதாவது: என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அரசியலை தூய்மையாக்கவே நான் வந்துள்ளேன். வெற்றி, தோல்வி எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது.

வாய் இருக்குல்ல..

யார் எப்படியோ என்னுடைய மக்களை விட்டுவிட்டு நான் போக முடியாது. மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி பாமக. ஆளுங்கட்சியினர் மக்களுக்காக வரமாட்டார்கள். அவர்களுக்கு மணல் திருட்டு, காண்டிராக்ட் எடுப்பது, சாராயம் விற்பது என பல வேலைகள் இருக்கு. மக்களாகிய நீங்களும் ஊமையா இருங்க. ஒருநாள் போராட்டம் நடத்துங்க.. வாய் இருக்குல்ல.. வாயை வச்சிகிட்டு என்ன பண்றீங்க? போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? ஓட்டை வச்சு என்ன செய்ய போறீங்க? வாய் இருந்தா தான் பிழைக்க முடியும். இல்லைனா உங்க பிள்ளைங்களும் அந்த சின்னங்களுக்கே ஓட்டு போட்டு அடிமையாகி செத்தே போயிடும். உங்களுக்கு தேர்தல்லாம் விளையாட்டா இருக்கு. நல்ல உடை உடுத்திக்கொண்டு, மேக்கப் போட்டுக்கொண்டு, விரலில் மை பூசிவிட்டு, வீட்டில் வந்து டிவி பார்ப்பது தான் தேர்தலா? தேர்தல் கொண்டாட்டம் எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. அதன்பிறகு அவர்கள் அவர்களின் வேலையை பார்க்கின்றனர்; நீங்கள் உங்கள் வேலையை பார்க்கிறீர்கள்.

அவமானம்

எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு? எதுக்கு தேர்தல்? நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருக்கிறது. அதை தேர்ந்தெடுப்பது இதுவரை உங்களுக்கு தெரியல. எனக்கு இது அவசியமற்ற ஒன்று. இனிமேலாவது மாறுங்கள். எனக்கு இந்த கடலூர் மாவட்டத்துல பிறந்தது அவமானமா இருக்கு. என்னை மதித்து ஓட்டளித்தவர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Balasubramanian
ஜூன் 20, 2024 12:58

உங்கள் தலைவர்கள் பொட்டி வாங்கறவங்க தான்.


Rahu
ஜூன் 20, 2024 08:23

பா மா க.பணத்துக்காக மாறும் கட்சி.மக்களை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது


Ganesh Kumar
ஜூன் 20, 2024 03:07

இப்படி தலையில் அடித்து சொன்னாலாவது தமிழிக மக்களின் மண்டையில் ஏறுகிறதா என பார்க்க வேண்டும் குடி போதை தலைக்கு ஏறிய பிறகு, மக்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் ஏது? மதுவை வைத்து அரசியலில் சுய லாபம் பார்க்கும் திராவிட கட்சிகள் ஒழிய வேண்டும் என்றால், அண்ணாமலை தலைமையில் உள்ள பி ஜெ பி கூட்டணியை மது அருந்தாதவர்கள் ஆதரிக்க வேண்டும்


anna durai
ஜூன் 19, 2024 16:15

அரசியலில் புது கோமாளி


Classical Indian
ஜூன் 19, 2024 11:52

அங்க போய் என்னத்த கிழிக்க போறார்


தஞ்சை மன்னர்
ஜூன் 19, 2024 10:49

முதலில் உங்கள் தொகுதி மக்களுக்கு உங்க சொந்த நிதியில் என்ன சாதிச்சிக்க சொல்லுங்க தங்கர்பச்சன் ஒன்னும் கிடையாது அப்புறம் எதுக்கு உங்களுக்கு இந்த ஆவேசம் போங்க உங்க பாழாப்போன சாதி பாசத்த கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டு விட்டு பிள்ளை குட்டிய படிக்க வைத்து அதிகாரத்தை கையில் எடுங்க மக்களுக்கு நன்மை செய்ய கற்று கொடுங்க


பச்சையப்பன் கோபால புரம்
ஜூன் 19, 2024 10:37

தங்கர் பச்சான் எந்த நாட்டு பெயர்? இது தமிழ்ப் பெயரில்லையே??


T.Gajendran
ஜூன் 19, 2024 09:46

"ஊழல் செய்பவன், பணத்தைதான், பிடிங்கிகொள்வான், மீண்டும், பணம், சொத்து, சேர்த்துகொள்ளலாம், ஆனால், மதவெறி, ஜாதிவெறி, மனிதனை, வாழவே விடாது, மிஸ்டர் தங்கர்பச்சன், இப்போ புரியுதா, மக்கள் ஏன் உங்களுக்கு, வாக்களிக்கவில்லை, ?


shrihariharan kp Tnr
ஜூன் 19, 2024 09:02

ஐயா உங்கள் நாக்கு இன்று ஒன்று பேசும் அப்படியே நாளை ஒன்று பேசும் உங்கள் கதை இப்போது முடிந்து விட்டது செல்லுங்கள் ?


Jebamani Mohanraj
ஜூன் 19, 2024 08:28

ராஜீவை புலிகள் கொன்றவுடன் தனு படத்தை பிடித்துக்கொண்டு ஊர்வலம் விட்ட கட்சி பாமக ஈழ தமிழ் இன அழிப்புக்கு துணை போன சோனியாவை விமர்சனம் செய்ய பாமக வுக்கு துணிவில்லாமல் போனது காலத்தின் அவல கோலம் மக்களை சொல்லி குற்றமில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ