உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காணாமல் போகும் கட்சிகள் விஜயை அழைக்கின்றன : அண்ணாமலை

காணாமல் போகும் கட்சிகள் விஜயை அழைக்கின்றன : அண்ணாமலை

மதுரை: ''தமிழகத்தில் காணாமல் போகும் கட்சிகள் நடிகர் விஜயை அழைக்கின்றன,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அறிவுரைமதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் காணாமல் போகும் கட்சிகள் நடிகர் விஜயை கூப்பிடுகின்றனர். விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை 10 சதவீதம் ராகுல் மீது வைக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அன்பான அறிவுரை கூறுவதே எனது கடமை.தவறுஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், உதயநிதி தனது மகனை முன் இருக்கையில் அமர வைத்தது தவறு. பின் இருக்கையில் அமர வைத்து இருக்கலாம். இதனை விட மாபெரும் தவறு, தன்னுடைய மகனின் நண்பர்களை முன் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கு அமைச்சர் மூர்த்தி நடந்து கொண்ட விதம்.யாரும் தன்னை வற்புறுத்தவில்லை எனக்கூறும் கலெக்டர், எதற்காக அவர்கள் அமர்ந்த இருக்கையில் இருந்து ஒரு இருக்கையை விட்டுக் கொடுத்தார்.ஒரு நிமிடத்திற்கு முன் கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கையில், இன்பநிதி நண்பர் அமர்ந்திருந்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்த பதில் ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன சொல்வதுநியாயப்படி உதயநிதிக்கும், மூர்த்திக்கும் நடுவில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், மையத்தில் இன்பநிதி அமர்ந்திருந்தார். இருக்கையை விட்டுக்கொடுத்ததே மாபெரும் தவறு. கலெக்டர் தூக்கி 3 இருக்கை தள்ளி அமர வைத்தனர். இது இரண்டாவது தவறு.அமர்ந்திருந்த இருக்கையை விட்டு கொடுத்து விட்டு இரண்டு இருக்கையை தள்ளிப்போவது பற்றி என்ன சொல்வது? அதிகாரிகள், தம்முடைய பதவியை தக்க வைத்து கொள்வதற்காக இருக்கையை தானமாக கொடுத்த கலெக்டர் மீது சாமானிய மனிதனுக்கு என்ன, மரியாதை நம்பிக்கை வரும்?தனது இருக்கையை கூட காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. சாமானிய மனிதனுக்கு கலெக்டர் என்ன நியாயம் கொடுக்க போகிறார்?சரியல்லமூர்த்தி இருக்கலாம். அதிகாரம் இருக்கும் வரை ஆடலாம். அதிகாரம் போன பிறகு சாதாரண மனிதனாக கூட்டத்தில் அமர்ந்து இருப்பார். அதுவேறு. அரசியல்வாதியை பற்றி பேசவில்லை. அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். அதிகாரிகள் தன்மானத்தை விட்டுக் கொடுக்க கூடாது.மதுரையில் நடந்தது மாபெரும் தவறு. நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளர்களிடம் பேசியது மாபெரும் தவறு. கலெக்டர் மக்களின் முகமாக இருக்கிறீர்கள். அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் சரியல்ல.கேள்விபரந்தூரில் விஜய் செல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், மக்கள் எப்படி அவரை சந்திப்பார்கள். இன்று அரசியல் கட்சி துவங்கியவர்களுக்கு பாதுகாப்பு, நூற்றுக்கணக்கான போலீசார் என்றால், பிறகு எப்படி மக்களை சந்திக்க போகிறீர்கள்? கூட்டத்தில் மக்கள் சொல்லும் பிரச்னைகளை எப்படி ஞாபகம் வைத்து கொள்ளப்போகிறீர்கள்? நாளை நீங்கள் பதவிக்கு வந்தால் யார் வந்து உங்களை சந்திக்க முடியும்? அரசியல் என்பது எளியவர்களுக்கா? வலியவர்களுக்கா? நட்சத்திர மதிப்பு உள்ளவர்களுக்காக?தங்களை நிரூபிக்காமல் அரசியலுக்கு வந்தவர்களுக்கா? என்ற கேள்வியை தமிழக அரசுக்கும், பரந்தூர் செல்பவர்களுக்கும் கேட்க விரும்புகிறேன்.அருகதை இல்லைதி.மு.க., கட்சி பிறக்கும் முன்பே திருவள்ளுவர் ஆன்மிக கருத்துகளை சொல்லி உள்ளார். திருவள்ளுவரை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்றால், அது ஈ.வெ.ரா., வழியில் வந்த தி.மு.க.,விற்கு அருகதை இல்லை. குறிப்பாக அக்கட்சி நாளிதழுக்கு அருகதை இல்லை. திருவள்ளுவரை ஆரிய கைக்கூலி என கூறிய பிறகு, நாங்கள் மஞ்சள் கொடி , காவி பூசினால் என்ன?சாபக்கேடுதமிழக மக்கள் யார் கொண்டு வர போகிறார்களோ அவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை விட கொஞ்சம் அறிவு அதிகமாக இருக்கிறதா என தெரிந்தால் போதும். ஐ.ஏ.எஸ்., அதிகாரியை வேலை வாங்க தெரிய வேண்டும். உதயநிதி அலங்காநல்லூருக்கு செல்லும் போது யாரும் இல்லாத சாலையில் கையை காட்டிக் கொண்டு செல்கிறார். மகனை முன்னிலைப்படுத்துகிறார். என்ன திறமை உள்ளது. என்ன சாதனை படைத்துள்ளனர். எந்த துறையில் நிபுணர்கள். எப்படி நிர்வாகத்தை இயக்குகின்றனர். தமிழகத்தின் சாபக்கேடாக பார்க்கின்றேன். எந்த துறை சார்ந்தும் இல்லாமல், அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் தந்தையின் அடையாளத்தை வைத்து மூன்றாவது முறையாக வர முயன்றால், அது தமிழகத்தின் சாபக்கேடு.நம்புவோம்யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சி பலமாகி கொண்டு இருக்கிறோம். இளைஞர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.2026ல் மாற்றம் வரும் தே.ஜ., ஆட்சிக்கு வரும் என்பது எனது தீர்க்கமான கருத்து. நல்லவர்கள் வருவார்கள். தே.ஜ., கூட்டணி வரும். மாற்றம் வரும் என நம்புவோம். 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என முதலில் சொன்னது பா.ஜ., ஆட்சியில் நிபுணர்கள், திறமைசாலிகள் வர வேண்டும்.சென்னையில் போலீஸ் கமிஷனர் நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி நடந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை வந்துள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க தனிப்படை உருவாக்க வேண்டிய நிலை தமிழகத்தில் உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pmsamy
ஜன 19, 2025 11:19

அண்ணாமலை போய் விஜய் கூட ஒட்டிக்கோ இல்லன்னா நீயும் காணாம போயிடுவே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 19, 2025 10:11

அதிமுக-பாஜக-தேமுதிக-தவெக கூட்டணி அமைத்தால் அக்கூட்டணிக்கு 190 தொகுதிகளில் வெற்றி உறுதி ..... இந்த கூட்டணிக்கு யார் ஒத்து வரவில்லையோ அவர்களுக்கு திமுகவுடன் ரகசிய உறவு இருக்கிறது என்பது நிரூபணம் ஆகும் .... மறுபுறம் விஜய் கூட்டணி அமைப்பது அவரைக் களமிறங்கிய திமுகவுக்கு செய்யும் துரோகம் ..... அந்தத் துரோகத்தை விஜய் நிச்சயம் செய்யமாட்டார் .....


Bhaskaran
ஜன 19, 2025 09:00

நீ ஒரு டுபாக்கூர் விஜய் அதைவிட கேடுகெட்ட டுபாக்கூர்


முருகன்
ஜன 19, 2025 08:21

அதில் நீங்கள் இல்லை தானே


கந்தன்
ஜன 19, 2025 04:48

நீயும் உன் கட்சியும் இங்க காணாம போவீங்க அது உறுதி என்ன கூப்பாடு போட்டாலும் தேராது


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 18, 2025 23:38

ஆனா வரிசையில் இடம் பிடிக்க போட்ட முதல் துண்டு இவரோடது தான்.


Mediagoons
ஜன 18, 2025 22:34

திருவள்ளுவர் ராமர், கிருஷ்ணர் என்ற கதாபாத்திரங்களையோ, கற்பனையிலான மனிதர்களையோ, மன்னர்களையோ ஹீரோக்களையோ துரோகிகளையோ ஆன்மிகவாதிகள் கடவுளர்கள் என்று கூறினாரா?


Shivam
ஜன 18, 2025 22:33

அட இத பார்றா தைரியசாலி விசு, நான் பயந்தாங்கொள்ளி, நீயாவது தைரியமா சொல்லப்பு யாரு அந்த???


Mediagoons
ஜன 18, 2025 21:47

50 ஆண்டுகளுக்கும் மேலங்கே காணாமல் போயிருந்த கட்சிதான் பாஜ


chinnamanibalan
ஜன 18, 2025 21:13

அரசு அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை அவர்கள் அரசு அதிகாரிகளே. ஆனால் அரசியல்வாதிகள்.... ஒரு காலத்தில் அரசியல்வாதிகள் மிகவும் மதிக்கப்பட்டனர். காரணம் தன்னலம் கருதாது அவர்கள் செய்த பணிகள். ஆட்சி அதிகாரத்தை இழந்த போது கூட, அவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கம்பீரமாக சென்றனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருக்கும் வரை கோடிகளை குவிப்பதும், பின்னர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிற்கும் அவலத்தையும் கண்கூடாக பார்க்கிறோம். இன்றைய அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து போனது மிகவும் கவலை அளிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை