உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திண்டுக்கல் தலப்பாகட்டியில் பிரியாணிக்கு தள்ளுபடி சலுகை

திண்டுக்கல் தலப்பாகட்டியில் பிரியாணிக்கு தள்ளுபடி சலுகை

சென்னை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, திண்டுக்கல் தலப்பாகட்டியில், பிரியாணிக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நாகசாமி தனபாலன், தலைமை தொழில் அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கு, விதவிதமான உணவு சலுகை கொடுக்கிறோம். தற்போது, ரம்ஜான் ஸ்பெஷல் ஆபர் வழங்குகிறோம். பார்ட்டி பேக்கில், ஒன்பது முதல் 10 நபர்கள் வரை சாப்பிடலாம். இதில், 10 வேக வைத்த முட்டை, 'சிக்கன் 65' இரண்டு போர்ஷன், 600 எம்.எல்., கோக், நெய் சாதம் மற்றும் பிரட் அல்வா வழங்கப்படும்.ரம்ஜானை முன்னிட்டு கூடுதலாக, 10 சதவீதம் தள்ளுபடி விலையில், இவை கிடைக்கும். இச்சலுகை, தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் உண்டு. இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை, உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட, திண்டுக்கல் தலப்பாகட்டிக்கு வாருங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை