உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரபட்சமான அகவிலைப்படி உயர்வு: குடிநீர் வாரியத்தினர் குமுறல்

பாரபட்சமான அகவிலைப்படி உயர்வு: குடிநீர் வாரியத்தினர் குமுறல்

மதுரை : 'அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவை பாரபட்சமாக செயல்படுத்துவதாக' அரசு செயலர் மீது குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதனால் அவர்களுக்கு 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு கிடைத்தது. இந்த உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோர் தங்கள் துறை செயலருக்கு அனுமதி வேண்டி கடிதம் எழுதினர்.இருதுறைகளுக்கும் செயலராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரான கார்த்திகேயன் உள்ளார்.அவரது அனுமதி கடிதத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்களுக்கு கடந்த டிச.4 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறையின் ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1 முதல் அமல்படுத்தி உத்தர விட்டுள்ளார். இதனால் குடிநீர் வாரியத்தினருக்கு 5 மாதங்கள் குறைவாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். எனவே அத்துறை ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குடிநீர் வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் பாண்டி கூறுகையில் ''இருநிர்வாகத்திற்கும் பொதுவான அரசு செயலரே இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. முதல்வரே கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்தும்படி கூறியும், முதன்மை செயலாளர் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என செயல்படுவது அதிருப்தியை அளிக்கிறது. இதுதான் சமத்துவமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த 2022 ஜனவரி முதல் 2024 வரை இதுபோல குடிநீர் வாரியத்தினருக்கு தாமதமாகவே அகவிலைப்படி உயர்வை வழங்குகின்றனர். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

KARTHIKEYAN
டிச 11, 2024 14:27

இந்த ஆரசு பொறுப்பேற்ற 2021 முதல் 2024 இந்தகாலகட்டங்களில்தான் அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். முதல்வர் அவர்களின். பார்வைக்குச் செல்லவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளே திராவிட மாடல் அரசு என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவார்கள்.


KARTHIKEYAN
டிச 11, 2024 13:30

இந்த ஆட்சி பொறுப்பேற்கும் வரை எந்தவித பாகுபாடின்றி அரசு அறிவித்த அதேதேதியில் அகவிலைபடி உயர்வினை எவ்வித தடையோ அல்லது தாமதமோ இன்றி பெற்று வந்தோம். முன்னாள் நிதிஅமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தவறான வழிகாட்டுதலில் பயணாக எங்களுக்கு 01/2022 முதல் இன்று வரை காலம் தாழ்த்திஅகவிலைபடிஉயர்வு பெற்று பாதிப்பிற்கு ஆளாகி உள்ளோம். மேலும் மாண்புமிகு முதல்வரும் அவர்களும் நிதிஅமைச்சர் திரு நேரு அவர்களும் எங்களுக்கு அரசு அறிவித்த தேதி முதல் அகவிலை படி வழங்க கூறியும், தலைமை செயலர் திரு. கார்த்திகேயன் அவர்கள், வரலாற்றிலே இல்லாத வகையில் தன் இஷ்டம் போல் கண்ட தேதியில் இருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த வண்ணம் உள்ளார். இது நமது முதல்வரின் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க நினைக்கிறார். 11000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வயிற்றில் அடிக்கிறார். வரும் தேர்தலில் மாறான நிகழ்சி நடந்தால் அதற்கு முழு பொறுப்பும் தலைமை செயலாளர் திரு. கார்த்திகேயன் அவர்களையே சேரும்.


Ramasamy pandy
டிச 10, 2024 16:21

இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் தான் எங்களுக்கு அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Ramasamy pandy
டிச 10, 2024 15:27

இந்த அரசு பொறுப்பேற்ற இந்த காலகட்டங்களில் தான் 2021முதல்2024அகவிலைபடி படி உயர்வு பாதிப்பு ஏற்பட்டுள்ளது


Ramasamy pandy
டிச 10, 2024 15:23

இந்த ஆரசு பொறுப்பேற்ற 2021 முதல் 2024 இந்தகாலகட்டங்களில்தான் அகவிலைபடி உயர்வுக்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம்.


Nagarajan Raju
டிச 10, 2024 15:07

இது முதல்வர் அவர்களின் பார்வைக்குச் செல்லவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளே திராவிட மாடல் அரசு என்ற நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி விடுவார்கள்.


Ramasamy pandy
டிச 10, 2024 15:05

இந்த திமுக அரசு பொறுப்பேற்ற இந்த காலகட்டங்களில் 2021மதல்2024ல் தான் இதுபோன்ற பாதிப்பு அகவிலைபடி காலதாமதம் வாரிய ஓய்வூதியர்களுக்கு நடக்கின்றது.


Ramasamy pandy
டிச 10, 2024 14:58

கடந்த14.04.1971முதல் இந்த ஆட்சி பொறுப்பேற்கும் முந்தைய நாள்வரை எந்தவித பாகுபாடின்றி அரசு அறிவித்த அதேதேதியில் அகவிலைபடி உயர்வினைஎவ்வித தடையோஅல்லது தாமதமின்றிபெற்று வந்தோம்.இந்த ஆட்சிபொறுப்பேற்றபின் புன்னியவான் மாண்புமிகு மேனாள் நிதி அமைச்சர் திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தவறான நடவடிக்கை இந்த அரசுக்கு வழங்கிய தவறான ஆலோசணையின் பயணாக அன்றில்இருந்து இன்று வரை அகவிலைபடிஉயர்வு பாதிப்பிற்கு ஆளாகிஉள்ளோம்.


Executive Engineer Proj Ariyalur
டிச 09, 2024 23:35

அரசுசெயலாளர் எவ்வளவு அகவிலைப்படி வாங்குகிறார்


Purusho thaman
டிச 09, 2024 18:27

அரசை வன்மையாக கண்டிக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை