வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓ பி ஸ் இல்லாத கட்சி AIADMK வே கிடையாது...
சென்னை; வருத்தம் தெரிவித்து வரக்கூடியவர்களை இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருக்கிறார்.அவர் அளித்த பேட்டி விவரம்; அ.தி.மு.க., தலைவர்கள் என்றைக்கும் பின் வாங்கியது கிடையாது. கட்சியின் வளர்ச்சிக்காக, பிளவுப்பட்டிருந்த நேரத்தில் இயக்கத்தை விட்டுக் கொடுத்து, ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தியவர் ஜானகி. அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று சென்ற பொதுக்குழுவில் இ.பி.எஸ்., தீர்மானம் நிறைவேற்றினார். அந்த அடிப்படையில் இன்றைக்கு பிரம்மாண்டமான விழாவை சிறப்பாக நடத்தி இருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் விழாவுக்கு வந்திருக்கின்றனர். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இ.பி.எஸ்., தொடர்ந்து இணைத்துக் கொண்டுதான் இருக்கிறார். வருத்தம் தெரிவித்து வரக்கூடியவர்களை கட்சியில் அவர் இணைத்திருக்கிறார். கட்சி இப்போது எந்த பிரச்னையிலும் இல்லாமல் பீடு நடை போட்டு கொண்டிருக்கிறது.இவ்வாறு ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஓ பி ஸ் இல்லாத கட்சி AIADMK வே கிடையாது...