உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தயார் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள்: பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை:

தயார் நிலையில் மாவட்ட நிர்வாகங்கள்: பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை:

l அதிகன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளனl நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலுார், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 1,193 'பொக்லைன்' வாகனங்கள், 806 படகுகள், 977 ஜெனரேட்டர்கள், 1,786 மர அறுப்பான்கள், 2,439 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன l நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படைகள் அனுப்பப்பட்டு உள்ளன l செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய மீட்பு படையின் ஒரு குழுவும், தமிழக பேரிடர் மீட்பு படையின் இரு குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் தலா ஒரு குழுவும் அனுப்பப்பட்டு உள்ளனl மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க, மீன்வளத்துறை இயக்குனருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது l கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள, கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்l அனைத்து கட்டுமான நிறுவனங்களும், தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்களை கீழே இறக்கி வைக்க வேண்டும். புயல் காற்றால் விளம்பர போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடற்படை தயார்

இந்திய கடற்படை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி சார்பில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு குழுக்கள், உபகரணங்கள், எப்போது எங்கு தேவைப்பட்டாலும், உடனடியாக விரைந்து சென்று உதவும் வகையில், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை