உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி இனிப்பு, காரம்! பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ஸ்பெஷல் ஆர்டர்

தீபாவளி இனிப்பு, காரம்! பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ஸ்பெஷல் ஆர்டர்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் அவற்றை தயாரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. புத்தாடைகள், அணிகலன்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடைவீதிகளை கலகலக்க வைத்து வருகின்றனர். பொருட்களை வாங்க மக்ள் குவிந்து வருவதால் கடைவீதிகளில் கண்காணிப்பையும் போலீசார் திவிரப்படுத்தி உள்ளனர்.இந் நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி, பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு; *பேக்கரிகளில் தயார் செய்து விற்கப்படும் பொருட்கள் உணவு பாதுகாப்பு தரச்சான்றுபடி தயாரிக்க வேண்டும்.* உணவு பொருட்களில் அதன் காலாவதி தேதி, தயாரிக்கப்படும் இடம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.*பாதுகாப்பான முறையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும்.* வெளிப்புறங்களில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்புகள், உணவு பாதுகாப்பு துறையில் முறையாக உரிமம் பெற்று தயாரிக்க வேண்டும்.* விதிகளை பேக்கரி உரிமையாளர்கள் மீறினால் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
அக் 25, 2024 22:30

தீபாவளிக்கு தயாரிக்கப்படும் பேக்கரி இனிப்பு காரம் பற்றிய உணவு பாதுகாப்பு துறையின் அறிவிப்பு இனிதே வெளியாகி அத்துடன் அவர்கள் கடமை முடிந்தது. இனி பொதுஜனம் தான் காலாவதி டயம், தரம் பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். Food poison ஏற்பட்டால் மட்டும் கண்டுகொள்வர்.


Lion Drsekar
அக் 25, 2024 21:31

செயற்கை இரசாயன வண்ணப்பூச்சுகள் மிக முக்கியமாக தவரிக்கப்படவேண்டும், இவைகள்தான் புற்றுநோயை உண்டாக்குகிறது . மேலும் சாதாரணமாக பிரட் தயாரிக்கும் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிரட்டுகள் மாவு முதல் பிரட் உருவில் அடுப்பில் இருந்து வெளியே எடுத்து கவரிகளில் போடப்படும்வரை அதன்மீது இரு இமி கூட இடம் இல்லாமல் மொக்கும் ஈக்கள் ?? இதுவரை யாருமே கண்டுகொள்வதே இல்லை, கைவண்டிகளில் விற்க்ப்படும் துரித உணவுகள் ஒரே பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் அதில் பயன்படுத்தப்பட்ட தட்டுகள் மற்றும் டம்பளர் அந்த குடத்துக்குள்ள மூழ்க வைத்து கழுவி, அடுத்தவர்களுக்கு கொடுக்கிறார்கள், அதுவும் விளக்கு இல்லாத இடங்களில் விற்கப்படும் சூப் கடைகள் இப்படித்தான் இயங்குகிறது .வந்தே மாதரம்


முக்கிய வீடியோ