வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வழக்கம் போல இலவசம், பணமுடிப்பு அனைவருக்கும் உண்டா? ஒருவேளை தமிழக திராவிடர்களிடம் பணம் இல்லையோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.
சென்னை : “கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில், மக்கள் விரும்பும் வகையில், தரமான மளிகை பொருட்கள், மூன்று சிறப்பு தொகுப்புகளில் விற்கப்படுகின்றன. “கூட்டுறவு பட்டாசு கடைகளில் இந்தாண்டு விற்பனை, 20 கோடி ரூபாயை தாண்டும்,” என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு துறை சார்பில் மாநிலம் முழுதும் உள்ள, 119 பல்பொருள் அங்காடி களில், 'கூட்டுறவு கொண்டாட்டம்' பெயரில், 190 ரூபாய்க்கு அதிரசம். முறுக்கு தயாரிக்க தேவைப்படும் 5 மளிகை பொருட்கள்; 199 ரூபாய் மற்றும் 299 ரூபாய்க்கு தலா, 14 மளிகை தொகுப்புகள் விற்கப்படுகின்றன. அதற்கான விற் பனையை, சென்னை தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ்., காமதேனு அங்காடியில், அமைச்சர் பெரியகருப்பன், நேற்று துவக்கி வைத்தார்.பின், அந்த வளாகத்தில் உள்ள கூட்டுறவு பட்டாசு கடையில் விற்பனையை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின், பெரியகருப்பன் அளித்த பேட்டி:
கூட்டுறவு அங்காடி களில், தரமான மளிகை பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு, வீடுகளில் சமையல், பலகாரம் தயாரிக்க பயன்படும் முக்கிய மளிகை பொருட்கள், மூன்று தொகுப்புகளில் விற்கப்படுகின்றன; இவை, தமிழகம் முழுதும் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். வரும் காலங்களில் ரேஷன் கடைகளிலும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுதும், 107 கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில், 166 பட்டாசு கடைகள் துவக்கப்பட்டுள்ளன. அவற்றில், சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசுகள் விற்கப்படுகின்றன. இந்தாண்டு பட்டாசு விற்பனை, 20 கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கம் போல இலவசம், பணமுடிப்பு அனைவருக்கும் உண்டா? ஒருவேளை தமிழக திராவிடர்களிடம் பணம் இல்லையோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.