உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரை சரிகட்ட துரைமுருகன் டில்லி பயணம்; பிரேமலதா கேள்வி

யாரை சரிகட்ட துரைமுருகன் டில்லி பயணம்; பிரேமலதா கேள்வி

திருவண்ணாமலை; யாரை சரி கட்ட அமைச்சர் துரைமுருகன் டில்லி பயணம் மேற்கொண்டுள்ளார் என்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; துரைமுருகன் வீட்டில் ரெய்டுக்கு சென்றது ரொம்பவும் லேட். இது முன்னரே நடந்திருக்க வேண்டும். ரொம்ப, ரொம்ப தாமதமாக நடந்திருக்கிறது. அந்தளவுக்கு இன்று ஊழல் தலைவிரித்தாடுகிறது. அவர் (துரைமுருகன்) யாரை சரி கட்ட டில்லி செல்கிறார் என்று தெரியவில்லை. ரெய்டு செல்வது பிரச்னையில்லை. ஆனால் என்ன ஆவணங்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். தப்பு செய்பவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட அதேநேரம், விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பச்சிளம் குழந்தை இறந்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
ஜன 05, 2025 19:33

கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுத்தாவது சிறைக்கு செல்லாமல் இருக்க மன்னிப்பு கேட்டு காப்பாற்றி கொள்ள அரசு முறை அற்ற அவசர பயணம்.


Anantharaman Srinivasan
ஜன 05, 2025 17:58

திமுக ஜெகத்ரட்சகன் எ வா வேலு ரெய்டுகள் போல் என்னுடைய வீட்டு ரெய்டையும் கிடப்பில் போடுங்கள் என்று மான்றாட யாரை சரிகட்ட துரைமுருகன் டில்லி பயணம் ? பிரேமலதா கேள்வி..


சம்பா
ஜன 05, 2025 17:45

உண்ணாமல பதில் சொல்லும்


சமீபத்திய செய்தி