மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2
சென்னை:தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில், நான்கு தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் நேற்று டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அப்பட்டியலுக்கு டில்லி மேலிடம் ஒப்புதல் அளித்ததும், இன்று இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, ஒன்பது தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட ஒன்பது தொகுதிகளில், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கரூர் ஆகிய நான்கு தொகுதிகள் மாற்றம் குறித்து, இரு கட்சிகளிடமும் உடன்பாடு எட்டாமல் பேச்சில் இழுபறி நீடிக்கிறது.திருச்சி தொகுதியை, ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தி.மு.க., விரும்புகிறது. எனவே, அத்தொகுதிக்கு பதிலாக, காங்கிரசுக்கு மயிலாடுதுறை ஒதுக்கப்படுகிறது. கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவியை போட்டியிட வைக்க, தி.மு.க., விரும்புவதால், அத்தொகுதிக்கு பதிலாக ஈரோடு தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்க விரும்புகிறது.அதேபோல, திருவள்ளூர் தொகுதிக்கு பதிலாக தென்காசி தொகுதியை தாருங்கள் என்றும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலுார் அல்லது கள்ளக்குறிச்சி தொகுதியை தாருங்கள் என, காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதி எம்.பி.,யான திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே, அத்தொகுதியின் பிரச்னை முடிவடைந்துள்ளது.அதேசமயம், மற்ற தொகுதிகளின் பிரச்னை குறித்து காங்கிரஸ் மேலிடம் தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம் பேச்சு நடத்திய பின், இரு கட்சிகளிடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago | 2