உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அமித்ஷா என்றைக்கு மதுரைக்கு வந்து மீண்டும் ஒரு கூட்டணியையும், மதுரையில் மிகப்பெரிய கூட்டத்தை மாநாடு போல நடத்திவிட்டு சென்று விட்டாரோ, அன்றையில் இருந்து அமித்ஷா டில்லியில் இருந்து தமிழகத்திற்கு பிளேட் ஏறிவிட்டார் என்று சொன்னால், தி.மு.க.,வினருக்கு ஒரு நடுக்கம் இருக்கிறது. இன்றைக்கு கூட பத்திரிகையில் செய்தி வந்து இருக்கிறது. அமித்ஷா பேசி இருக்கிறார். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் வர போகிறது. அந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கிற, தமிழக மக்களுக்கு நன்றி, வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று அமித்ஷா பேசி இருக்கிறார். ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். தமிழக முதல்வருக்கு வேறு வேலை இல்லை.

எனது பாராட்டுக்கள்

ஓரணியில் காவல் நிலையத்தில் லாக்கப் டெத், ஓரணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து செத்து போனால் ரூ.10 லட்சம். விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. தவறுகள் குறித்து முத்தரசன் கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள்.காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா, இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. எந்த விஷயத்தையும் அவர்கள் கையில் எடுப்பது இல்லை. காவல் நிலையம் மட்டுமல்ல, கள்ளச்சாராயமாக இருந்தாலும் கூட எந்த பிரச்னையையும் அவர்கள் கையில் எடுக்கவில்லை. கேட்டால், அவர்கள் கூட்டணியில் இருப்பதால் ஏதும் கேட்பதில்லை. 2026ல் தி.மு.க., கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்.

22 வருடம்....!

மதுரை எப்போதுமே பா.ஜ.,வினருக்கு ராசியான நகரம், மதுரையில் தான் அமித்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. அதேபோன்று முருக பக்தர்கள் மாநாடும் நடைபெற்றது. மதுரை தி.மு.க.,விற்கு ராசி இல்லாத ஒரு இடம், இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பின், 22 வருடம் அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பிரேம்ஜி
ஜூலை 13, 2025 07:05

இவரெல்லாம் ஒரு தலைவர்? நிச்சயமாக ஆளும் கட்சிதான் திரும்ப ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமை போதாது! மக்கள் அநியாயம் அக்கிரமம் பார்த்து ஓட்டு போடுவதில்லை! பணம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு! ஆளும் கட்சி விளம்பரங்கள் மூலமே வென்று விடும்!


முருகன்
ஜூலை 12, 2025 22:55

அதற்கு ஜெயிக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2025 18:28

7.3 கோடி ஓட்டளிக்க உரிமை உள்ளவர்கள் அதில் ஓட்டு போடும் 1. 1.3 கோடி- முதல் வகையை சேர்ந்தவர்கள் நல்ல அளவு பணம் கொடு யாருக்கு வேண்டுமானலும் போடுவேன் என்று உறுதியளிப்பவர்கள் 2. 1.1 கோடி - இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் - பணம் கொடு உங்களுக்கே போடுகின்றேன் என்பவர்கள் 3. 1.2 கோடி பேர் எவனுக்கு ஓட்டு போட்டா என்ன அவன் என்ன வந்து கிழிக்கப்போறான் நாட்டுக்காக எவனுக்கோ ஒட்டு போடு என்ற எண்ணமுடையவர்கள் 4. 0.6 கோடி பேர் தான் இவனுக்கு ஓட்டு போட்டால் நாட்டுக்கு நன்மை இவனுக்கு ஓட்டு போட்டால் நாட்டிற்கு தீமை என்று ஆய்ந்து அறிந்து ஒட்டு ஓடுபவர்கள் . 5 3.1 கோடி பேர் ஒட்டு போட வருவதேயில்லை. நாடு விநாச நாசா நிலை அடைய இந்த ஒட்டு போடாதவர்கள் தான் முக்கிய காரணம்


ப.சாமி
ஜூலை 12, 2025 17:05

2026 ல் மீண்டும் தி.மு.க.ஆட்சிக்கு வரும். பண மூட்டைகள் ஏராளம் அங்கே உள்ளது. பணத்தை வாரி வழங்கி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமரப்போகிறார்கள்...


Padmasridharan
ஜூலை 12, 2025 16:37

கூட்டணி இல்லாம தனியா நின்னு விஜயம் செய்கிற தைர்யம் யாருக்குமே இல்லையா சாமி. . NOTA வுக்கு வீணா போடுறத ஏதாவது கட்சிக்கு போடலாமே. .


Sundar R
ஜூலை 12, 2025 16:20

கருணாநிதி குடும்பத்தினர் செய்யும் வாரிசு, குடும்பம், உறவினர்கள் மற்றும் பினாமிகள் அரசியலை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழகத்திற்கு எள்ளளவும் சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான திமுகவை தகனம் செய்ய வேண்டும். தேசவிரோத, பிரிவினைவாத, கிறிஸ்தவ மிஷனரி கட்சியினர்களான திமுக, தவெக, நாதக, விசிக , மதிமுக மற்றும் மநீம ஆகியோர் தான் தேசத்திற்கு விரோதமாக பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள். தேசவிரோதிகள் தமிழகத்திற்கும் நம் பாரத தேசத்திற்கும் தேவையில்லை. மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தமிழக மக்களுக்கு கிடைக்க விடாமல் போராட்டம் நடத்தி தடுப்பதும் மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளே தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் மேற்கூறிய கிறிஸ்தவ மிஷனரி கட்சியினருக்கு எதிராக திரண்டாலே போதும். தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.


Oviya Vijay
ஜூலை 12, 2025 16:10

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மூன்று விஷங்கள் பெரிதாகப் பேசப்படப் போகிறது. முதல் இரண்டு விஷங்கள் தேசிய அளவில் அதிர்ச்சியும் மூன்றாவது விஷயம் தமிழக அளவில் ஆச்சர்யத்தையும் கொடுக்கப் போகிறது... முதல் விஷயம் மக்கள் மனம் கவர்ந்த பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக என்னும் பேரியக்கத்தின் வீழ்ச்சி... இரண்டாவது விஷயம் பாஜக மேலிடத்தில் நடக்கப்போகும் மீட்டிங்... என்ன செய்தாலும் நம்மால் தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் நடக்கப்போகும் மீட்டிங்... முருகன் மாநாடு என்ற போர்வையில் அரசியல் மாநாடு நடத்தி முடித்தாயிற்று. அங்கு வந்த மக்கள் எல்லாம் பாஜக ஆதரவாளர்கள் என்பது போல் பொய்யான ஒரு பிம்பத்தையும் உருவாக்கியாயிற்று... அதிமுக என்னும் கட்சியை கபளீகரம் செய்தும் பார்த்தாயிற்று... இவ்வளவு செய்தும் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் காலூன்ற முடியவில்லையே என்பதாகத் தான் அவர்களது விவாதம் இருக்கப் போகிறது... மூன்றாவது விஷயம் என்னவென்றால்... புதுக்கட்சியான நடிகர் விஜயின் தவெக மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளை விட அதிகமாக வாங்கப்போகும் வாக்குகள்... அனுபவம் வாய்ந்த மிகப் பழமையான பல தேர்தல்களை இதுவரை எதிர்கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் கதிகலங்கிப் போயிருக்கும்... தவெகவின் வளர்ச்சியைப் பார்த்து... தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் என் வாக்கு பலித்திருக்கும்... பொறுத்திருந்து தான் பாருங்களேன்...


மணியன்
ஜூலை 13, 2025 06:48

ஒரு கிரிப்டோ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Indian
ஜூலை 12, 2025 15:12

2026 இல் தி மு க , புனித ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பப்படும் ...


Amsi Ramesh
ஜூலை 12, 2025 15:56

2026 இல் தி மு க , ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஓங்கோல் அனுப்பப்படும்


ராஜாராம்,நத்தம்
ஜூலை 12, 2025 16:13

இந்த முறை உன்னைப் போன்ற மூர்க்கன்களின் ஓட்டு திமுகவிற்கு பலன் அளிக்காது ஏனென்றால் பனையூர் பண்ணையார் நடிகர் விஜய் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை மொத்தமாக பெற்று திமுகவிற்கு சங்கு ஊதப் போகிறார் அப்போது உன் கதறலை பார்க்க ஆனந்தமாக இருக்கும்.


M Ramachandran
ஜூலை 12, 2025 15:00

பழனிசாமி என்ற சுய நலவாதி பெருச்சாளியை வையத்தில் கட்டி கொண்டு யிருக்கிம் நீங்க மற்றும் அண்ணாமலையாய் எதிரியாக நினைக்கும் சில உட் கட்சி கும்பலையும் வைத்து கொன்டு நிச்சயம் தீ மு க்கா வைய்ய வீட்டிற்கு ணைப்ப முடியாது. தீ மு க குவித்து வைத்திருக்கும் பணமலையய்க்கு எதிர்க்கத்து ஒன்றும் செய்ய இல்லாது. ஒரு 1000 கோடியை வீசியெறிந்தால் பழனியும் மொட்டையடித்து கொண்டு சத்தம் போடாமல் காவடி தூக்கி கொண்டு ஓடி ஒளிந்து விடும்


Indian
ஜூலை 12, 2025 15:00

மக்கள் முடிவு , சொல்லட்டும் , நீங்க சொல்லாதீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை