உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.லோக்சபா தேர்தலின் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்கிய நிலையில், திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுக தரப்பில் ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு, அவர்களிடம் நேர்காணலும் நடத்தி முடிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ar3ccgt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையையும் இன்று (மார்ச் 20) திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.இதன்படி,வட சென்னை- கலாநிதி வீராசாமிதென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன்மத்திய சென்னை- தயாநிதி ஸ்ரீபெரும்புதுார் - டி.ஆர்.பாலுகாஞ்சிபுரம் (தனி) - க.செல்வம்அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்வேலுார்- கதிர்ஆனந்த்தர்மபுரி - ஆ.மணிதிருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரைஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன்கள்ளக்குறிச்சி - கே.மலையரசன்சேலம் - செல்வகணபதிஈரோடு - பிரகாஷ்நீலகிரி (தனி) - ஆ.ராசாகோவை - கணபதி ப. ராஜ்குமார்பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமிபெரம்பலுார் - அருண் நேருதஞ்சாவூர் - ச.முரசொலிதேனி - தங்க தமிழ்செல்வன்துாத்துக்குடி - கனிமொழிதென்காசி - ராணி ஸ்ரீகுமார்இப்பட்டியலில் புதியவர்கள் 11 பேர், பெண்கள் 3 பேர், பட்டதாரிகள் 19 பேர், முதுநிலை பட்டதாரிகள் 12 பேர், மருத்துவர்கள் 2 பேர், வழக்கறிஞர்கள் 6 பேர்.

இண்டியா கூட்டணி தான் பிரதமர் வேட்பாளர்

சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி: பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி என்ற பயம் வந்து விட்டதால், அடிக்கடி தமிழகத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. வரட்டும்; வேண்டாம் என, சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வரும் பிரதமர், தமிழகத்தில் மழை, வெள்ளம் வந்தபோது, சோதனை ஏற்பட்டபோது வந்து, மக்களுக்கு ஆறுதல் சொல்லியிருந்தால், மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கேட்க உரிமை உண்டு. குழு அமைத்து, அதில் விவாதித்து, அவர்கள் திருப்தி அடைந்து விட்டனர். காங்கிரஸ் தேசிய கட்சி. மற்ற மாநிலங்களில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்து விட்டு, தமிழகத்தில் இருக்கும் கூட்டணியோடு பேச கொஞ்சம் காலதாமதமானது. அதையும் சுமுகமாகத்தான் முடித்திருக்கிறேன் என்பதை தவிர, வேறு ஒன்றும் இல்லை. அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, கோபதாபம் ஏற்பட்டு முடித்து விட்டதாக நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறதா என, நிருபர்கள் தான் கேட்கிறீர்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? பிரதமரின் விமர்சனத்தை எங்கள் பிரசாரத்தின் வாயிலாக, எதிர்கொள்ள இருக்கிறோம். நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்... இங்கிருக்கும் கவர்னர் ஒருவரே போதும். தி.மு.க., விற்காக நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல இப்போது பிரதமர்; எங்களுக்கு நன்றாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். எனவே, இரண்டு பேரும் சேர்ந்தே மீண்டும் தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தருவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். பிரதமர், வாரிசு அரசியல் என்கிறார். தி.மு.க., குடும்ப கட்சி தான். தி.மு.க., குடும்ப பாச உணர்வோடு கருணாநிதி, அண்ணா துவங்கி வைத்திருக்கின்றனர். உழைப்பின் அடிப்படையில்தான் பொறுப்புகளும், பல பணிகளும் கொடுக்கப்படுகிறதே தவிர, வாரிசு அடிப்படையில் கொடுக்கப்படுவது அல்ல.அ.தி.மு.க., தேர்தல் கூட்டணி முடிவாகாமல் இருப்பதற்கு நாங்கள் காரணம் அல்ல. எங்கள் கூட்டணியை நாங்கள் முடித்து விட்டோம். பா.ஜ., வளர்ந்து வருகிறது என, அவர்கள் சொல்கின்றனர். தேர்தல் முடிந்தபின், யார் வளர்ந்திருக்கின்றனர், யார் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர், யார் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர், யார் நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்குகின்றனர் என்பது தெரியவரும்.எங்கள் கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகிறது. அந்த தைரியத்தில் தான் மத்திய அரசின் திட்டங்கள் மாதிரி கொடுத்திருக்கிறோம். இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்றால், இண்டியா தான் கூட்டணியின் வேட்பாளர். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

ஸ்டாலின் எச்சரிக்கை

வேட்பாளர்கள் அறிவித்த பிறகு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பேசுகையில், ஒன்றியம், நகர அளவில் பட்டியல் எடுக்கப் போகிறேன். லோக்சபா தேர்தலில் எந்த இடத்தில் ஓட்டு குறைந்தாலும் அந்த இடத்து பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும். கூடுதல் ஓட்டுகள் பெற்றுத் தருவது அமைச்சர்கள் பொறுப்பு. திமுக கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்ட காலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள்.தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டி கட்சியின் நலன் முக்கியம். தமிழகத்தின் நலன் முக்கியம் என்று வெற்றியை நோக்கி வேலை செய்ய வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம் தான் அனைவரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 100 )

Harindra Prasad R
மார் 23, 2024 21:19

Educated people in the city need to their Otts then இந்த கேபிள் திருடன்g ராஜா, தமிழச்சி, ஜெகத்ரச்கன்,தயாநிதி மாறன், வேலுார்- கதிர்ஆனந்த் மற்றும் பெரம்பலுார் - அருண் நேரு will not be in the forth coming elections


anbu
மார் 21, 2024 04:26

மத்திய சென்னை- தயாநிதி மாறன் , வேலுார்- கதிர்ஆனந்த் மற்றும் பெரம்பலுார் - அருண் நேரு மாற்றப்பட வேண்டும் இவர்களை மக்கள் தவிர்க்க வேண்டும். உழைப்பவர்களுக்கு சீட்டு என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் அன்பு, நியூ ஸிலண்ட்


Kuppan
மார் 20, 2024 21:35

தமிழக மக்களே தயவு செய்து உங்களுக்கு கொஞ்சம் கூட ரோசம் சொரணை இருக்கா இப்படி இந்த கும்பல் திரும்ப திரும்ப திரும்ப ஏமாற்றி வருகிறார்கள், இந்த கேபிள் திருடன், 2g ராஜா தமிழச்சி,ஜெகத்ரச்கன் இப்படி பட்ட ஆளுங்களை எப்படி தான் மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுப்பீர்கள் இவர்கள் என்ன பட்டா போட்டு வைத்து இருக்கிறார்களா, இதை விட்ட அடுத்து வாரிசுகள் மற்ற இடங்களில்


Kuppan
மார் 20, 2024 21:23

மீண்டும் மீண்டும் அதே புளிச்சி போன ஆட்கள், பெண்களுக்கு வெறும் 14 சதம், உங்கள் வாக்குறுதி 33 சதம் என்ன ஆனது.ஆரம்பிக்கும் போதே மீற பட்டுள்ளது.


Subramanian N
மார் 20, 2024 20:20

மத்திய சென்னை தொகுதி தயாநிதிக்கு எங்கே இருக்கு என்பதே தெரியாது , தயவு செய்து இவருக்கு ஒட்டு போடுவதை தவிர்க்கவும்.


ArGu
மார் 20, 2024 19:22

இதுங்க எல்லாத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும்... அப்போ தான் உங்க குடும்ப பெண்களை கண்டபடி பலித்து பேச வசதியாக இருக்கும்


வெகுளி
மார் 20, 2024 17:30

மக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று கருணாநிதி கூறியதை முழுமையாக நம்பி வெளியிடப்படும் பட்டியல் போல இருக்கே...


N SASIKUMAR YADHAV
மார் 20, 2024 17:09

தமிளச்சி தங்கபாண்டியனும் இந்துமத துரோக ஆ ராசாவும் தோற்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஆட்கள்


sankar
மார் 20, 2024 16:57

இந்து மத விரோதிகளை ஓட ஓட விரட்டுங்கள்


sankar
மார் 20, 2024 16:56

ஆல் அவுட் நிச்சயம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை