உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: ரேஷன் கடைகளில் தடையின்றி பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும். திமுக கொண்டாட்டத்தில் உள்ளது. ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இன்னும் முழுமையாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nk5xnsr5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ரேஷன் பொருட்களை விநியோகிக்காமல் இருப்பதா?. பிப்ரவரி மாதமே 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கோரப்பட்ட டெண்டர் என்னவானது?. தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இ.பி.எஸ்., கண்டனம்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில், உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Maheesh
ஜூன் 18, 2024 21:50

கடந்த 3 வருடத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெரிய திட்டம் எது? பெரிதாக ஒன்றும் இல்லை. கடைசிக்கு எப்பவும் நடக்கும் இது போன்ற வேலை ஏதாவது ஒழுங்காக இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. கடந்த மூன்று வருடத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது திராவிட மாடல் என்ற விளம்பரம் மட்டும் தான்.


Rajathi Rajan
ஜூன் 18, 2024 19:00

அண்ணாமலை காட்டம் ஏன் மிளகாய் அடியில் வைத்து அது மேல உக்காந்துட்டாரா???


Ms Mahadevan Mahadevan
ஜூன் 18, 2024 18:10

நீங்கள் யாத்திரை போனபோது பொது மக்கள் திண்டாடவில்லையா?


Mohan
ஜூன் 18, 2024 17:54

சரியா சொன்னீங்க


raja
ஜூன் 18, 2024 17:10

புற கொள்ளை கூட்டம் வேறு என்று உணர்ந்து கொள்ளை கூட்ட குடும்பத்தை அடித்து விரட்டுகிராயோ அன்று தான் உனக்கு விடியல்...


MADHAVAN
ஜூன் 18, 2024 16:57

இன்னும் நிஜம் நாளில அண்ணாமலை தலைவர் பட்டம் போய்டும், அப்புறம் அட்ரஸ் இல்லாம திரியும் எச் ராஜா மாதிரிதான் பேச்சு இருக்கும்,


கோவிந்தராஜ்
ஜூன் 18, 2024 16:36

இது பத்தாது இன்னும் வேணும் அப்பவும் திருந்த மாட்டானுக இறுதியில் கடைசி நேர கவனிப்பே வெல்லுது


Kasimani Baskaran
ஜூன் 18, 2024 16:10

பங்காளி ஒன்றும் சொல்லவில்லை... பாராட்டவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்...


T.sthivinayagam
ஜூன் 18, 2024 16:06

பாஜாக திண்டாட்டம்


P. SIV GOWRI
ஜூன் 18, 2024 17:03

இங்கு பாஜக எங்கே வந்தது


YESPEE
ஜூன் 18, 2024 15:45

அறிக்கை விடுவது விட்டு உருப்படியாய் ஏதாவது செய்வது நல்லது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ