உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

காமராஜரை விமர்சித்த தி.மு.க., நிர்வாகி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காமராஜரை அவதுாறாக பேசிய, தி.மு.க., மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, சமூக வலைதளங்களில், காங்கிரசார் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.சென்னையில் தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில் நடந்த விழாவில், காமராஜரை இழிவுப்படுத்தும் விதமாக, ராஜிவ்காந்தி பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.'அரசியல் புனிதர் காமராஜர் பற்றியும், அவருடைய திட்டங்களை பற்றியும், தியாகங்கள் பற்றியும் அசிங்கமாக பேசிய ராஜிவ்காந்தியே மன்னிப்பு கேள்' என்ற வாசகத்துடன், அவரது படத்திற்கு துடைப்பம், செருப்பு மாலை அணிவித்து, அதை சமூக வலைதளங்களில் காங்கிரசார் பகிர்ந்து வருகின்றனர்.காங்கிரஸ் பேச்சாளர் சூளை ராமலிங்கம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், ராஜிவ்காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து, புகார் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக ராமலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு பொதுச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: காமராஜர் குறித்த வரலாறு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாத ராஜிவ்காந்தி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. 'காமராஜர் தன் சொந்த நிதியிலா பள்ளிகளை திறந்தார்' என கேட்டுள்ளார். ராஜாஜி மூடிய பள்ளிகளை மட்டுமே காமராஜர் திறந்தார் என, பொய்யான கருத்தை விதைக்க முயன்றுள்ளார். பொறுப்பில்லாத பேச்சுக்காக ராஜிவ்காந்தி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்தார் தி.மு.க., ராஜிவ் காந்தி

தி.மு.க., நிர்வாகி ராஜிவ் காந்தி வெளியிட்ட அறிக்கை: புத்தக வெளியீட்டு விழாவில், காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. காமாஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், அவர்களின் வருத்தத்தை தெரிவித்தனர். காமராஜரை சிறுமைப்படுத்தவோ, குறைத்து பேசவோ, தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை. காமராஜர் தமிழ்ப்பேரினத்தின் சொத்து. நான் பேசியதன் வாயிலாக மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீமான் ஒரு மன நோயாளி

'முதல்வராக நான் பொறுப்பேற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் இருக்கிறது. புதிய வாழ்த்துப் பாடலாக பாரதிதாசன் பாடலை வைப்போம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அதை விமர்சித்து, தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:மொழியை அடிமைப்படுத்துகிற மத்திய அரசை எதிர்த்து பேச திராணி இல்லை. தமிழை நீஷபாஷை என சொன்ன ஆரியத்தை எதிர்த்து பேசவில்லை. இயக்கம் நடத்து என சொன்னால், அதை செய்யாமல், தமிழர்களை தீண்டதகாதவர்கள் என சொன்ன மனுதர்மத்தை எதிரி என சொல்லாமல், தமிழ் மொழியை, தமிழகத்தை பாதுகாத்த, பாதுகாக்கும் திராவிட தத்துவத்தை தான் எதிர்த்து பேசுவேன் என, ஒருவர் சொன்னார் என்றால், ஒன்று அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல், வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Nandagopalan Nandagopalan
அக் 25, 2024 10:42

சூப்பர் நியூஸ் கொடுக்க ப்படுகிறது.ஆனால் இடையில் வரும் விளம்பரங்கள் மேலும் கீழும் ஏறி ஏறி இறங்கி வருவதை நான் ஆதரிக்கவில்லை


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2024 05:48

இதற்க்கு தான் சொல்கிறேன் சசிகாந்த் செந்தில் போன்றவர்கள் காங்கிரசை திமுகவின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணி போன்ற நிலையில் இருந்து வீறு கொண்டு எழ வைத்திருக்க வேண்டும் , அப்போ எல்லா துவாரங்களை மூடிக்கொண்டு திமுக என்ற குடும்ப கட்சி காமராஜர் போன்ற புனிதரை மரியாதையோடு பார்க்கும்


Kasimani Baskaran
அக் 25, 2024 04:48

காமராஜர் என்கிற மகா சக்தியை காங்கிரஸ் என்ற ஒரு சிறிய அட்டைப்பெட்டிக்குள் அடைத்து விட முடியாது. ஏனென்றால் அவர் அணைத்து வித மக்களும் முன்னேறவேண்டும், படிக்கவேண்டும் என்று நினைத்தவர் - அதை நோக்கி கடுமையாக உழைத்தவர். தன்னலம் கருதாத ஒரு சிலர்தான் அத்தகைய மதிப்பை பெறுவார்கள். அதன் பின்னர் படித்த பட்டதாரியான அண்ணாதுரையை முன்னிறுத்தி திகவில் இருந்து நீக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட திமுக போட்டியிட்டது. கண்டமேனிக்கு பொய் சொல்லி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னும் வாயை மூடாமல் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.


kumar
அக் 25, 2024 02:11

சீமானை பார்த்து வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும் என்று ராஜீவ் கூறுவதை கண்ணாடிக்கு முன் நின்று அவர் சொல்லிக்கொள்ளலாம். வேங்கை வயல் குற்றவாலியை பிடிக்கவில்லை, ஒரு தலித் வேலையாள் வீட்டில் கொடுமை படுத்திய திமுக சட்டசபை உறுப்பினர் மகன் இன்னும் தண்டிக்க படவில்லை, அந்த உறுப்பினராய் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை, இன்னும் உங்களுக்கு ஏன் சமூக நீதி போர்வை? என்று அவர் தலைவரை கேட்க முடியுமா ?


kumar
அக் 25, 2024 02:07

கொடுமை என்ன வென்றால், தமிழக காங்கிரஸ் திமுக கிளை தலைவர் செல்வா பெருந்தகை, ராஜீவ் காந்திதியின் இந்த அவதூறுக்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்காமல், இதனை ஸ்டாலின் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று சொல்லி இருப்பது தான். இந்த கேவலமான பிழைப்புக்கு அவர் எங்களுக்கும் காமராஜர் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற சூளுரை வேறு .


kumar
அக் 25, 2024 02:01

"காமராஜர் குறித்து நான் பேசியது காங்கிரஸ் கட்சியினரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" இந்த ஆள் பெருந்தலைவரை தாரக குறைவாக பேசியதை ஒத்துக்கொள்ளவே இல்லை . மூதறிஞர் ரா ஜா ஜி யையும் கேவலமாக விமரிசித்ததற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் . ராஜாஜி பள்ளிகளை மூடினார் என்பதற்க்கு இவர் ஆதாரம் காட்ட முடியுமா ? பள்ளிகளுக்கு மாணவர்களை குடும்பங்கள் அனுப்புவதற்கு ஒரு வழியாக பாதி நேரம் பள்ளிக்கு வந்து மீதி நேரத்தில் பெற்றோர்களின் தொழிலில் ஈடுபடலாம் என்ற அவரது சமரசம் அவர் குலைக்க கல்வியை கொண்டு வந்தார் என்று ஈ வே ரா , காமராஜர் , ராஜாஜி அவர்களை பற்றி இந்த அரை வேக்காடு அவதூறு சொல்ல நாம் கேட்க வேண்டும் என்பது தமிழகத்தின் சாபக்கேடு


M Ramachandran
அக் 24, 2024 20:45

தியாகம் என்பது என்ன என்று தெரியாத திருட்டு கும்பலிடம் காமராஜரென்ன அனைத்து தமிழ்நாட்டு சுத்தந்திர போராட்ட வீரர்களையும் இழிவு செய்த கும்பல். இங்கு குடிகாரர்களுக்கு விருது பட்டயம். இது தான் இன்றைய நில்லை.


M Ramachandran
அக் 24, 2024 20:23

அடேயப்பா எங்கிருந்து இந்த வீரம். எதற்கும் அடுத்த நடவடிக்கைக்கு காத்திருங்கள் அடிமைகலே. டில்லியதிலிருந்தது சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்க சொல்ல போகிறார்கள்.


Anbu Raj
அக் 24, 2024 18:00

கர்மா வீரர் காமராஜர் மனித உருவில் அவதரித்த ஒரு தெய்வம் அவர் கட்டிய ஆணை தொழிற்சாலை கல்விக்கூடங்கள் எத்தணை எத்தனை


A.Kennedy
அக் 24, 2024 17:42

மனு தர்மம் புக் எந்த சைஸ் இருக்கும் என்று தெரியுமா அல்லது தொட்டாவது பார்த்திருப்பானா இந்த ராஜிவ் காந்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை