உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் பட்டியலின பெண்கள் மீது வன்கொடுமை தினகரன் பேச்சு

தி.மு.க., ஆட்சியில் பட்டியலின பெண்கள் மீது வன்கொடுமை தினகரன் பேச்சு

சிவகங்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின பெண்கள்மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளதாக சிவகங்கையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பேசினார்.அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துஉள்ளது. கட்டுபடுத்த அரசு தவறிவிட்டது. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கேட்பாரற்று கிடக்கிறது. முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கவும் தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. கனிமொழி, ஆ.ராஜா போன்றவர்கள் தான் பயனடைவார்கள். லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் தற்போது ஏமாற்றும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.தி.மு.க., ஆட்சியில் அனைவரும் கண்ணீர் விடுகின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர். தேர்தலில் வெற்றி பெற பண மூட்டையுடன் பழனிசாமி சுற்றி வருகிறார். தேர்தலில் போட்டியிட நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடந்திருப்பது பொய்யான கருத்துகணிப்பு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
பிப் 23, 2024 19:49

திருட்டு நடக்கிறது... கொலை நடக்கிறது... விபத்து நடக்கிறது... இதுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்? போலீஸ் குடியிருப்பிலேயே ஏட்டு மனைவிக்கு பாதுகாப்பு இல்லை.சக போலீஸ்காரரே பாலியல் தொல்லை கொடுக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில, ஒரு பெண்எஸ்.பி.க்கு டிஜிபியே தொல்லை கொடுக்கிறார். அந்த அம்மா காரையே ஒரு எஸ்.பி., நிறுத்தி ரகளை பண்றாரு.. இதற்கெல்லாம் அப்போதைய முதல்வரா பொறுப்பு? எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலே சாதி கலவரமே நடக்கலையா? கொலை, கொள்ளையே நடக்கலையா? ஆர்.கே.நகர் மக்களை இருபது ரூபாய் கொடுத்து ஏமாற்றிவிட்டு ஓடி வந்தவரை நினைப்பு இருக்கா? நாலு வருஷம் ஆட்சியில் இருந்த எடப்பாடியே பண மூட்டையுடன் சுற்றுகிறார் என்றால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 1991-96 2001-2006, 2011 முதல் அம்மா இறக்கிற வரை உடன் இருந்த உங்க சின்னம்மா மற்றும் உங்களின் குடும்பத்தாரிடம் எத்தனை கண்டெய்னர் பணம் இருக்கும்? சொல்லுங்க சார்... உண்மைவிளம்பியே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை