உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதித்துறையை இழிவுபடுத்தும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்

நீதித்துறையை இழிவுபடுத்தும் தி.மு.க.,: ஹிந்து முன்னணி கண்டனம்

'நீதிபதி மீதான குற்றச்சாட்டு, ஒரு தீர்ப்புக்காக லோக்சபாவில் கொண்டு வருவது, நீதித்துறையை இழிவுபடுத்துவது போன்றது' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கில் தீர்ப்பு கூறிய காரணத்துக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது, தி.மு.க., - காங்., கட்சி எம்.பி.,க்கள் லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். நீதிபதி மீது வீண் பழி சுமத்தி பதவி விலக வைக்க சதி செய்கிறது. இந்த, இரு கட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இதன் வாயிலாக, பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய நிலைப்பாடு இந்திய இறையாண்மைக்கு எதிரானது. நீதிபதி மீதான குற்றச்சாட்டு, ஒரு தீர்ப்புக்காக லோக்சபாவில் கொண்டு வருவது, இதுவே முதல்முறை. இது நீதித்துறை மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதிபதிகளை மிரட்டும் போக்கு என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பல தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தவில்லை. இத்தகைய போக்கு கவலைக்குரியது. தீர்ப்பின் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும் போது, அந்த தீர்ப்பை அளித்த நீதிபதியை விமர்சனம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இது நீதித்துறையை மிரட்டி பணிய வைக்கும் சதியாகும். நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை, அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றுபட்டு தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
டிச 11, 2025 11:55

இங்கே பதிவிடும் சிலர் நீதிமன்றத்தை பற்றி தவறான விமர்சனம் வைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் கேசில், நீதிபதி தமிழர் வழிபாட்டை காக்க, ஹிந்துக்களின் காலம் காலமான கோவில் பகுதியில் விளக்கு ஏற்ற நல்ல முடிவை எடுத்து உள்ளார். இதுவே தமிழரின் பல்லாயிரம் ஆண்டு கலாச்சாரம். உங்கள் மத உரிமையை, கலாச்சாரத்தை மாற்றுவது, உங்கள் தாயை அவமதிப்பது போன்ற விஷ செயலாகும். இதுதான் டாக்காவிலும், லாஹூரிலும், காபூலில் 1930 களில் நடந்தது. அங்கே ஹிந்துக்கள் இப்போது 3ம் தர குடிமக்களாக இப்போது நடத்தப்படுகின்றனர்.


Ajrjunan
டிச 11, 2025 13:26

இந்தியாவில் எங்க ஹிந்து மத உரிமை பரிகப்படுகிறது. 80 சதவீத மக்களின் உரிமையை 20 சதவீதம் கொண்டவரால் என்ன செய்ய முடியும். லாஜிக் இல்லாமல் பதிவு போட உங்க இயக்கம் சொல்லி கொடுத்தது தெரிகிறது. சீனா 40 கிலோ மீட்டரை ஆக்ரமித்துவிட்டான். அதை கேட்டல் தொ டாக்காவிலும், லாஹூரிலும், காபூலிலழும்னு சம்பந்தம் இல்லாத கதையை அவுத்து உடறது.


baala
டிச 11, 2025 09:19

நாட்டுக்கு கெடுதல் செய்யும் நபர்களை அந்த ஆண்டவன் தண்டனை கொடுக்க மாட்டானா?


Suppan
டிச 11, 2025 15:01

20% உள்ளவன்அதுவும் பாராளுமன்ற அங்கத்தினர் திருப்பரங்குன்றம் மலையின் மீது அமர்ந்து பிரியாணி சாப்பிடுகிறான். அதுவும் அரசு ஆதரவுடன் . அதை சமூக வலைத்தளங்களில் திமிருடன் பதிவு செய்கிறான். அவனை இந்த 80% சமூகம் என்ன செய்யமுடிந்தது?


Ajrjunan
டிச 11, 2025 08:56

ஹிந்து முன்னணி ஹிந்துக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததா. கூலிக்கு மாரடிப்பதை விட்டுவிட்டு புள்ள கூடிய படிக்க வைங்க. ஹிந்துக்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில், மருத்துவத்தில் முன்னேற முயற்சி செய்யுங்கள்.


Modisha
டிச 11, 2025 08:53

அதே தீர்ப்பு sari தான் என்று அடுத்த நாளே சொன்ன இரண்டு நீதிபதிகள் மேல் விமர்சனம் இல்லை . ஏன் ? அவர்கள் திமுகவுக்கு பிடிக்காத ஜாதி இல்லை. நல்லா ஒழிச்சாங்க ஜாதியை .


Kalyanaraman
டிச 11, 2025 08:43

ஏற்கனவே சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆயிரக்கணக்கான வழக்குகள், பல வருடங்களாக தீர்ப்பை எதிர்நோக்கி தேங்கியுள்ளது. நீதித்துறை காலத்திற்கு ஏற்றவாறு தங்களை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் இது.


raja
டிச 11, 2025 08:25

தமிழகத்தை தமிழனை ஒட்டுமொத்தமாக விங்யான முறையில் சுரண்டும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட திருட்டு திராவிட குடும்பம் இதுபோல ஒரு நீதிபதியின் வீட்டில் மூட்டை மூட்டையாய் பண கட்டுகள் எரிந்த பொழுது அவர் மீது இதுபோல இம்பின்ச் மெண்ட் கொண்டுவரவில்லை என் என்றால் அவர் இந்த திருடர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி ந்த பண முட்டைகள் அவருக்கு இந்த கொள்ளை கூட்ட குடும்பம் கொடுத்து இருகிராரோ என்று தமிழர்கள் நினைக்கிறார்கள்..


V RAMASWAMY
டிச 11, 2025 08:23

இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு தி மு கவிற்கு சாதகமாகும் தீர்ப்புகளை எதிர்த்து வழக்குகள் தொடரவேண்டும்.


KOVAIKARAN
டிச 11, 2025 07:15

நீதி மன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கமுடியாமல் இந்த திருட்டு தீய திமுக இது போன்ற கேவலமான செயல்களில் இறங்கியுள்ளது. நமது தமிழக ஊழல் MP க்களுக்குத் தெரியும், லோக் சபையிலும் ராஜ்ய சபையிலும் இது ஒன்றும் நிறைவேறாது என்று. இருந்தாலும், நீதிபதிகளை மிரட்டும் பாணியில் இதை செய்துள்ளார்கள். நீதிமன்றங்களில் மீண்டும் மீண்டும் கேவலப்பட்டும் இந்த திருட்டு திமுக கும்பலுக்கு இன்னும் உரைக்கவில்லையே. என்ன செய்வது, அவர்களின் மரபு genes அப்படி.


Indian
டிச 11, 2025 06:55

பா ஜா வை சார்த்த யாரும் இதற்கு முன் இழிவு படுத்தவில்லையா ?


vivek
டிச 11, 2025 07:20

தற்குறி என்று பலமுறை சொல்லியுள்ளோம்


சிட்டுக்குருவி
டிச 11, 2025 06:40

நம் முதல்வரை யார் என்று நினைத்தீர்கள் .இவர்தான் தமிழ்நாட்டின் Kim Jong Un. பார்த்து பேசுங்கள் .யாரும் இவரைப்பற்றி குறை சொல்லக்கூடாது .


சமீபத்திய செய்தி