உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் இருக்கும் தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்; துரைமுருகன் உத்தரவு

பொது இடங்களில் இருக்கும் தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்; துரைமுருகன் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று தி.மு.க., பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27.1.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த 06.03.2025 அன்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும், பொது இடங்களிலும் வைத்துள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கட்சி கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

vinoth kumar
மார் 20, 2025 03:18

இதேபோல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் அனைத்து தலைவர்கள் சிலைகளையும் அகற்றி , அவர்கள் சார்ந்த கட்சி அலுவகங்களிலும் அல்லது கட்சிக்காரர்களின் இடங்களிலும் வைக்க வேண்டும்.


xyzabc
மார் 20, 2025 00:22

துரை முருகனின் உருப்படியான காரியம்


Raghavan
மார் 19, 2025 21:34

kedu mudivatharkkul kambankalai ahattravittal avarkalakku yenna thandanai koduppaar ivar? athaippattri ondrume illaiye? naan adikirathupol adikkiren neeyum azhuvathupol azhu enpathupol irukku?


sridhar
மார் 19, 2025 18:27

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் - பத்திரிக்கை செய்தி . அடுத்த நாள் கட்சியில் அமைதியாக சேர்த்துக்கொள்ள பட்டார் . Adhe போல் தான் இதுவும் .


Anantharaman Srinivasan
மார் 19, 2025 18:11

Wait.. அதுக்கும் கோர்ட் உத்தரவு வரும். எல்லா தலைவர் சிலையும் இடம் பெயரும்.


தமிழன்
மார் 19, 2025 17:23

திமுக இல்லாத தமிழகத்தின் முதல் மைல் கல் .. இதே வேகத்தில் ஆட்சியும் அதை தொடர்ந்து இந்த கட்சியும் அகற்றப் பட வேண்டும்.


தமிழன்
மார் 19, 2025 17:22

இப்போ கொடி.. எப்போ கஆட்சி..?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 19, 2025 17:16

இது மாதிரியே நீதி மன்றம் பிளெக்ஸ் பேனர் வைக்கறது தொடர்பா கொடுத்த தீர்ப்புக்கும் செய்யலாமே லார்டு முருகா?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 19, 2025 17:07

பழைய கொடிக் கம்பங்களை அகற்ற ஒரு ரேட், புதுக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு ஒரு ரேட்


rama adhavan
மார் 19, 2025 17:02

தீர்ப்பை ஏர்கிறாரா, அல்லது அடி பணிகிறாரா? என்ன செருக்கு? ஏன் ஏற்காமல் உச்ச நீதிமன்றதுக்கு மேல் முறையீடு செய்ய வேண்டியதுதானே? மீண்டும் மூக்கு உடைபட வேண்டியது தானே?


புதிய வீடியோ