உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க., அரசு: மத்திய அமைச்சர் காட்டம்

அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க., அரசு: மத்திய அமைச்சர் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, தி.மு.க., அரசு காலில் போட்டு மிதிக்கிறது,” என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, தீக்குளித்து இறந்த மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பூர்ணசந்திரன் வீட்டுக்கு மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று சென்று, பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின் அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பூர்ணசந்திரன் தன்னுயிரை தியாகம் செய்துள்ளார். ''பூர்ணசந்திரன் உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு. பூர்ணசந்திரன், தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் தி.மு.க., அமைச்சரோ, அரசோ அவருக்கு மரியாதை செய்யாதது அவமரியாதையே,” என்றார்.

அடிப்படை உரிமை

முன்னதாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: பக்தர்களின் வழிபாட்டு உரிமையை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையை மறுப்பதற்கு தி.மு.க., அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், நீதிபதி மீது பார்லிமென்டில் 'இம்பீச்மென்ட்' நோட்டீஸ் கொடுக்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க., அரசு காலில் போட்டு மிதிக்கிறது.

பெரிய அநீதி

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், கடவுள் முருகன் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அப்படியென்றால், 'திருப்பரங்குன்றத்திற்கு பெரிய அநீதி இழைத்து விட்டேன். அதற்காக முருகனிடம் மன்னிப்பு கேட்டு மொட்டை அடித்துக் கொள்வேன்' என ஸ்டாலின் கூறுவாரா? மொட்டை கூட அடிக்க வேண்டாம். திருப்பரங்குன்றத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சாமி கும்பிட சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Madras Madra
டிச 31, 2025 11:05

நேரம் நெருங்கும்போது இப்படியெல்லாம் செய்வார்கள் என்று கண்ணன் கீதையில் கூறியுள்ளார்


Perumal Pillai
டிச 31, 2025 09:39

முதுகெலும்பு அற்றவர்கள்.


Chandru
டிச 31, 2025 09:32

அதை விட மத்திய அரசும் நீதி மன்றங்களும்இதனை வேடிக்கை பார்ப்பதுதான் மிக பெரிய அவலம்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 08:58

ஆனால் பாஜக என்று தீயசக்தி சொல்கிறது ......


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 09:03

ஆனால் பாஜக ன்னு தீயசக்தி சொல்லுது .....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 08:57

அரசியலமைப்பு சட்டத்தை மிதிக்கிறது தி.மு.க. .....


Mario
டிச 31, 2025 08:47

மாநில உரிமைகளை மிதிக்கிறது பிஜேபி ., அரசு


vivek
டிச 31, 2025 09:53

London முட்டு சந்தில் சுற்றி திரியும்...


Tamil Inban
டிச 31, 2025 08:32

இவர் சமூகத்தில் 100 ல் 90 சதவீதம்பேர் கிருஸ்தவர்களாக மாறிவிட்டனர், எதனால் என்று தெரியுமா, அவர்கள் எல்லாம் சட்டத்தை மதித்து மாறினார்களா இல்லை மிதித்து மாறினார்களா


Madras Madra
டிச 31, 2025 11:06

விஷம தனமானது


V RAMASWAMY
டிச 31, 2025 08:04

அவர்கள் எதைத்தான் மதித்தார்கள்? எல்லாவற்றையும், சட்டத்தை, நீதிமன்ற தீர்ப்புகளை, மத்திய அரசை, ஏன் மக்கள் விருப்பங்களையும் சேர்த்து அனைத்தையும் மிதித்துக்கொண்டு தானிருக்கிறார்கள். மக்கள் இவர்கள் போடும் சட்டங்களை மதிக்காமலிருக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?


GMM
டிச 31, 2025 07:57

நீதிமன்ற தீர்வு சரி, தவறு என்று பார்க்க ஆளும் கட்சிக்கு அதிகாரம் இருக்காது. முதலில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றி, பின் கஷ்டங்களை எடுத்து சொல்லி மாற்றி அமைத்து விடலாம். தீர்வு சொன்ன நீதிபதி மீது இம்பீச்மெண்ட் தீர்மானம் சட்ட விரோதம். இதனை ஒழுங்கு செய்ய உச்ச நீதிமன்றம் முதல் யாருக்கும் வழி தெரியவில்லை. திமுக அரசியல் அமைப்பு சட்டத்தை மிதிக்கும், எரிக்கும், கிழிக்கும். திமுக மீது நடவடிக்கை எடுக்க தெரியவில்லை என்றால் விட்டு விட வேண்டும்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ