உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சனாதனத்தை தி.மு.க., அரசு தொடர்ந்து எதிர்க்கும்

 சனாதனத்தை தி.மு.க., அரசு தொடர்ந்து எதிர்க்கும்

தமிழகத்தில் ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நினைப்பது போன்ற காரியங்கள், வட மாநிலங்களில் வேண்டுமானால் ஈடேறலாம். தமிழகத்தில் அவர் நினைப்பது, பகல் கனவாக இருக்கும்.நாங்கள் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். சமாதானத்தை போற்றும் தி.மு.க., அரசு; சனாதனத்தை தொடர்ந்து எதிர்க்கும். அ.தி.மு.க.,வில் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் கொள்கைகளை முழுதுமாக பா.ஜ.,விடம் அடிமைப்படுத்தி விட்டனர். பா.ஜ.,வைச் சேர்ந்த எச்.ராஜா பேச்சை யெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர், தரம் தாழ்ந்த அரசியல்வாதி. அவரைப் போன்றவர்கள் அரசியலில் இருப்பது, நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சாபக்கேடு. - சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அசோகா
டிச 09, 2025 08:06

வரும் தேர்தலில் திமுக டிபாசிட் இழக்கும்


Gopal
டிச 09, 2025 07:37

இவனை குப்பையில் தூக்கி போட வேண்டும்.


Sowdarpatti Rayarpadi Ramaswamy
டிச 09, 2025 06:39

? இவர் கட்சி என்ன நேர்மையான அரசியல் கட்சியா? இன்று ஹிந்து அறநிலையத்துறையில் தான் உண்டியல் வருமானம், நிலபுலன், சொத்து நகை என நிறைய இருக்கிறது, அதை எவ்வாறு மடை மாற்றுவது, கொள்ளை அடிப்பது என இயங்கும் கூட்டம்


Raj
டிச 09, 2025 06:27

சனாதனத்தை எதிர்க்கும் உங்களுக்கு எதற்கு அறநிலையத்துறை மந்திரி பதவி. இனி தொடர்ந்தால் தானே எதிர்ப்பதற்கு 2026 ல் இருக்கு ரிவிட்டு.


raja
டிச 09, 2025 06:21

என்ன கால கொடுமை சனாதானத்தின் உப்பை தின்று கொண்டு கோயிலின் சொத்துகளை கொள்ளை அடிக்கும் .


சமீபத்திய செய்தி