உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை: இபிஎஸ்., தாக்கு

திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை: இபிஎஸ்., தாக்கு

சென்னை: '' விடியா திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளுங்கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த உடன், மின்கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பால் விலை ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன. அரிசி, காய்கறி, வீட்டு உபயோக எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்கள், மணல், ஜல்லி, சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. கொலை, கொள்ளை வழிப்பறி என அதிகரித்து வரும் குற்றச் செயல்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆளுங்கட்சி நிர்வாகிகளால், போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் ஜாதி, இன துவேசங்கள் அதிகரிக்கின்றன. மின்வெட்டால், மக்கள் அல்லலுறுகின்றனர். 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களை கடனாளியாக ஆக்கியது தான் விடியா திமுக அரசின் சாதனை. 36 மாதங்களாக எந்த புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இது தான் திமுக அரசின் 3 ஆண்டுகால சோதனைகள். இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த விடியா திமுக ஆட்சி தொடர்ந்து தமிழகம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சோமு
மே 08, 2024 17:03

அதுக்கு முன்னாடி.பத்தாண்டு அதிமுக ஆட்சி நரக வேதனை


Elangovan KANNAN
மே 08, 2024 16:49

Before the people of Tamil Nadu crying in the ruling of ADMK period now people are saying very happy in all sectors do not shouting like mental dog in Press


Kasimani Baskaran
மே 08, 2024 15:31

பங்காளிகளை எப்படி கடிந்து கொள்ள முடியும் - அதனால்த்தான் மயிலிரகால் வருடுகிறார்


திகழ்ஓவியன்
மே 08, 2024 13:24

சவுக்கு சங்கரின் வீடியோக்கள் எல்லாமே எப்போதுமே எல்லை மீறித்தான் இருக்கும்


mindum vasantham
மே 08, 2024 13:07

வைகோ காலை வாரி பதவி பிடித்து அவரது மகனையே ஏசும் கலை யாருக்கு வரும்


Apposthalan samlin
மே 08, 2024 12:53

எடபடியாருக்கு வேதனை மக்களுக்கு சாதனை என்பது பாலிமெண்ட் தேர்தல் முடிவுகள் சொல்லும்


Santhakumar Srinivasalu
மே 08, 2024 12:50

இவர் ஆட்சியில் எல்லாம் மிகவும் நன்றாக ........ நடந்ததாம். பேட்டி போதும். நிறைய சோடா குடித்து ஓய்வு எடுங்க!


Narayanan
மே 08, 2024 12:26

ஆளும் அரசு கொடுக்கும் வேதனைகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு ஒரு திறமையான எதிர்கட்சித்தலைவராக இன்றளவும் பணியாற்றவில்லை மாறாக ஆளும் அரசுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது பேசி பயனில்லை முதலில் எப்படி எதிர்கட்சித்தலைவராக பணியாற்ற வேண்டும் என்று படியுங்கள் அதன்படி செயல்படுங்கள் இல்லையென்றால் உங்கள் முகவரி விரைவில் மாயமாகும்


MADHAVAN
மே 08, 2024 12:10

பாவம் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லி என்னபண்ணுவது, இவ்வளவுகாலம் குனிந்து குனிந்து பதவிக்காக சொந்தக்கட்சியை பிரிச்சு, தனது பெயர் எடப்பாடி அல்ல எட்டப்பன் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் அதிமுகவை தள்ளிவிட்டார், அந்த பயத்தில் இப்படி உளறுவது சகஜம்,


G Mahalingam
மே 08, 2024 12:06

அப்போது ஆக எடபாடியார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தினம் தினம் போராட்டம் நடத்தி கம்யூனிஸ்ட் திமுக விசிக இப்போது அதே அஸ்தரத்தை எடுத்து ஆக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக பாஜாக பாமாக போராட்டம் நடத்துங்கள் அடுத்த தேர்தலில் திமுகவை விரட்டி அடியுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை