திமுக அரசின் திருப்திபடுத்தும் அரசியல் அம்பலம்: அண்ணாமலை கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''திருப்பரங்குன்றத்துக்கு இன்று (டிச. 03)நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி வழிபாட்டு முறைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசின் திருப்திபடுத்தும் அரசியல் அம்பலப்பட்டுள்ளது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் இனி விளக்கத்துக்குரிய விஷயமல்ல. அது ஒரு உண்மை. ஹிந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஹிந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் பக்தர்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.திருப்பரங்குன்றத்துக்கு இன்று நூற்றுக்கணக்கான போலீசாரை அனுப்பி வழிபாட்டு முறைகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் திமுக அரசு, அதன் திருப்திபடுத்தும் அரசியலின் முழு அளவையும் அம்பலப்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் இந்த அரசுக்கு ஒரு பொருட்டு இல்லையா இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.