உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்னியர் இட ஒதுக்கீட்டில் நாடகம் ஆடும் தி.மு.க., அரசு! : ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீட்டில் நாடகம் ஆடும் தி.மு.க., அரசு! : ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்பதற்காக, தி.மு.க., அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நாடகமாடுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:வன்னியர் 10.50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க, மேலும் ஓராண்டு காலம் தேவை என்று, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழக அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து நடத்தும் காலம் தாழ்த்தும் நாடகமாகவே தோன்றுகிறது.கடந்த 2022 ஏப்ரல் 8ல், அன்புமணி தலைமையில் பா.ம.க., குழு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது, 'சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவோம்' என, உறுதி அளித்தார்.அப்போது, வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று கூறாத முதல்வர் ஸ்டாலின், இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிறார். முதல்வரின் திடீர் மன மாற்றத்தின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது தெரியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீடு என்பது, 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கிய வரம். அது சிலரது வஞ்சத்துக்கும் வன்மத்துக்கும் இரையாவதை அனுமதிக்க முடியாது. வன்னியர்களின் வரமான இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக, எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு பா.ம.க.,வினரும், வன்னியர்களும் தயாராக உள்ளனர். அதற்கு இடம் கொடுக்காமல், வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

saravan
ஜூலை 25, 2024 12:21

இவர் என்று தான் பொது அரசியலுக்கு வருவாரோ... கருமம்


Palanisamy T
ஜூலை 25, 2024 17:32

தமிழர்களிடையே பிரிவினையுண்டாக்கும் பிற்போக்கு சக்தியாக பாமக மாறி வருகின்றது. பாமக சாதிவெறிக் கட்சியாக மாறுவதை அக்கட்சித் தலைவர்கள் இன்னும் உணரவில்லை இவர்கள் தங்களை வெளியில் மட்டும் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள். பொதுநலச் சிந்தனை கொஞ்சமும் இவர்களிடமில்லை. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்வதும் அவர்களின் நலனும் முக்கியமென்பதும் முக்கியம். நீங்கள் சாதிக் கணக்கு கேட்கவில்லை. அந்தக் கணக்கில் வன்னியரின் வலிமை எவ்வளவு யென்பதுதான் உங்களின் ஆதங்கம் ஒருவேளை நீங்கள் உங்களின் சாதிப் போராட்டம் நாளை நடத்தினால் மற்றவர்களை தேவையில்லாமல் அந்தப் போராட்டத்தில் இழுக்கவேண்டாம். தமிழர்களை தமிழர்களாக வாழவிடுங்கள்.


Kesavan
ஜூலை 25, 2024 11:46

என்ன இப்ப அதுக்கு நாடகம் ஆடுதுன்னு வச்சுக்கயா அதனால என்ன நீ வேண்டுமானால் 234 தொகுதிகளையும் நின்று ஒரு 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வன்னியருக்கான இட ஒதுக்கீடை உறுதி செய்து கொள் அப்ப கூட அது கோர்ட்டில் நிற்காது நீ பணம் சம்பாதிப்பதற்கு வன்னியர்களின் இட ஒதுக்கீடு தான் ஆயுதமாக பயன்படுத்துவாயா? வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலா இருக்கிறது இல்ல உன் ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டும் என்றால் அது நடக்காது எவனும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சு வாழு வயசாச்சே தவிர அறிவு கொஞ்சமாவுது இருக்குதா நீ எல்லாம் உயிரோடு இருப்பதே இந்த நாட்டுக்கு பாரம்தான் வாங்குன பொட்டிக்கு விசுவாசமா கூவுற


கோவிந்தராஜ்
ஜூலை 25, 2024 11:43

சாலையோர மரங்களுக்கு முடிவு காலம் பக்கத்துல இருக்கும் போல ?


Palanisamy T
ஜூலை 25, 2024 11:10

நீங்கள் தமிழரா அல்லது வன்னியரா, இதை மட்டும் முதலில் சொல்லுங்கள் உங்கள் கட்சிப் பெயரை பாட்டாளி வன்னியர்க் கட்சி என்று முதலில் பெயர் மாற்றுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.


s chandrasekar
ஜூலை 25, 2024 11:05

அரசு அனைத்துவிதமான சலுகைகளையும் நிறுத்தவேண்டும் . ஜாதி, மதம், இனம் அடிப்படையிலான சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் சலுகை அளித்தும் மேலும் சலுகை வேண்டும் என்றால் இந்த நாடு எப்படி முன்னேறும் ,சமதர்ம சமுதாயம் எப்போது உருவாகும் .


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி