உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லும் தி.மு.க.,: இ.பி.எஸ்., தாக்கு

ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லும் தி.மு.க.,: இ.பி.எஸ்., தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: '' ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தி.மு.க., எந்த பொய்யை வேண்டுமானாலும் சொல்லும்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.சேலத்தில் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு தி.மு.க., அரசு தான் கடிதம் எழுதி உள்ளது. இது குறித்த செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. தற்போது ரத்து செய்யக்கோரி கடிதம் எழுதுவதாக முதல்வர் ஸ்டாலின் நாடகம் அரங்கேற்றி உள்ளார். சுரங்கம் அமைக்க அனுமதி கோரியதே தி.மு.க., அரசு தான்.தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் துன்புறுத்தல் ஆகியன நடந்து கொண்டுள்ளன. தி.மு.க., அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. அடியோடு சீர்கெட்டு உள்ளது.வணிகர்களுக்கு வரிமேல் வரி போட்டு பாதிக்கச் செய்வது வேதனை அளிக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். நாகையில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பழனிசாமி அளித்த பதிலில் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி இருக்கும் வரை சொத்து வரி உயரவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், உயர்த்திவிட்டு எங்கள் மீது பழிபோடுகின்றனர். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கிறோம் என்கின்றனர். மத்திய அமைச்சரை அழைத்து விழா நடத்துகிறார்கள். சொத்து வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்படும்போது, போராட்டம் நடத்தினீர்களா? அல்லது பார்லிமென்டில் குரல் எழுப்பினீர்களா? எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கின்றனர். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் தான் உள்ளது. சொத்து வரி ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்றியதை குறைக்க வேண்டும்.தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்படாது என்றனர். தி.மு.க.,வின் பொய் வாக்குறுதியை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டனர். அதனால் அவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஆட்சிக்கு வர எந்த பொய்யை வேண்டும் ஆனாலும் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் அறிக்கையை மறந்து மக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.வேளாண் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என மாநில அரசு சட்டம் இயற்றலாம். நான் முதல்வராக இருந்த போது டெல்டா மாவட்டங்களில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணியை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு உள்ளது. தி.மு.க.,வில் தான் கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இதனைத்தான் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார்.அதிமுக ஆரோக்கியமான கட்சி. தி.மு.க., மாதிரி அடிமைக் கட்சி கிடையாது. சுதந்திரமாக செயல்படும் கட்சி. இங்கு வாரிசு அரசியலுக்கு இடமில்லை. யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு உண்டு. இடமுண்டு. ஆலோசனை கூட்டம் என்பது கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு. இது உதயநிதிக்கு தெரியாது. அவர் தற்போது தான் அரசியலுக்கு வந்தார். உடனே எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் ஆகிவிட்டார். அவர் குறித்து இன்னும் சொல்லலாம். அவராக புரிந்து கொண்டு நடந்தால் நல்லது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
நவ 29, 2024 21:27

ஏன் வீண் கருத்து. கூட்டணி இல்லாமல் வெற்றி நினைத்து பார்க்க முடியாது. காங்கிரஸ் , திமுக, பிஜேபி கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியுமா. ? அல்லது வழக்கு போட்டு, பதிவு செய்த கட்சிகள் அனைத்து தொகுதியிலும் கட்டாயம் போட்டி போட வேண்டும் என்ற உத்தரவு பெற வேண்டும். முடியுமா. ? எந்த கட்சிக்கும் தமிழக முழுவதும் செல்வாக்கு இல்லை. எடப்பாடிக்கு தனி செல்வாக்கு எங்கும் இல்லை. இரட்டை இலை உறுதி இல்லை . வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. எதிர் கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்தில் பத்திரிக்கை செய்தி. திமுக மீது போலி தாக்குதலை நிறுத்துக.


S.L.Narasimman
நவ 29, 2024 20:19

ஏறத்தாழ 550 தேர்தல் வாக்குறுதிகளை விடியல் குடும்பம் சும்மா அளந்து விட்டாங்க. அதிலே வேறு நீட் ஓழிப்பு முதல் கையெழுத்து. கடைசியிலே மாணாக்கர்களுக்கு பட்டைநாமம்தான் மிச்சம்.


Narayanan Muthu
நவ 29, 2024 19:57

இவர் தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும் இவரின் பேச்சு மக்களிடம் எடுபடாது. மீண்டும் அண்ணாதிமுக வருவதற்கான வாய்ப்பே இல்லை. ஒருவேளை செல்வாக்குள்ள தலைவர் யாராவது கட்சிக்கு தலைமை தூங்கினால் வாய்ப்புண்டு. அப்படியான செல்வாக்குள்ள தலைமை கட்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமே தென்படவில்லை.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 29, 2024 19:44

எடுபுடி.உங்கம்மா சொன்ன இலவச கைபேசி எங்கே


Rajan
நவ 29, 2024 19:17

நீங்க என்னதான் எச்சரிக்கை விடுத்தும் தேர்தலில் மக்கள் இலவசங்கள் பார்த்து மயங்கி விட்டார்கள். நல்ல கூட்டணி அமைப்பதே உங்கள் தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும். பாஜவும் ஆட்சியை பிடிக்க தான் எண்ணும். மஹாராஷ்டிரா மாடல் ஏன் ஏற்க கூடாது


சமீபத்திய செய்தி