உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!

சட்ட விரோதமாக குடியேறிய இலங்கை தொழிலதிபரிடம் திமுக உறுப்பினர் அட்டை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்த இலங்கை தொழிலதிபர், அவரது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.இலங்கையைச் சேர்ந்தவர் முகமது அர்ஷத், 46; தொழிலதிபர். இவர், சென்னை புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வந்தார். இவர், சென்னை ஓட்டேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சட்ட விரோதமாக குடும்பத்தாருடன் தங்கி இருப்பதாக, ஐ.பி., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் இரு தினங்களுக்கு முன், முகமது அர்ஷத்தை பிடித்து விசாரித்தனர். இது பற்றி கியூ பிரிவு போலீசார் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த முகமது அர்ஷத்தும், அதே நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரானும் நெருங்கிய நண்பர்கள்.இலங்கையில் தொழில் போட்டி காரணமாக, இம்ரானுக்கும், பூங்கொடி கண்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இம்ரான் ஆதரவாளர்களை, பூங்கொடி கண்ணனின் ஆதரவாளர்கள் 2017ல் சுட்டுக் கொன்றுள்ளனர். இம்ரானின் நெருங்கிய நண்பர் என்பதால், பூங்கொடி கண்ணனின் ஆதரவாளர்கள் தன்னையும் சுட்டுக் கொன்று விடுவர் என்ற பயத்தில், 2019ல், இலங்கையில் இருந்து முகமது அர்ஷத் தமிழகம் வந்துள்ளார்.அதன்பின், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் அழைத்து வந்துள்ளார். இவர்கள், சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.முகமது அர்ஷத், தன் நண்பர் சுரேஷ் என்பவர் வாயிலாக, மண்ணடியில் உள்ள அரசு இ - சேவை மையத்தில் விண்ணப்பித்து, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவற்றை பெற்றுள்ளார்.கடந்த 2022ல், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிப்பதாக, போலியான ஆவணங்களை கொடுத்து, திருச்சி அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இணையதளம் வாயிலாக தி.மு.க., உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளார். முகமது அர்ஷத்திடம் இருந்து, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், முகமது அர்ஷத் மற்றும் அவரின் குடும்பத்தார், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது பற்றி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துாதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன், முகமது அர்ஷத் நேற்று முன்தினம் இரவு நாடு கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Kulandai kannan
ஜூலை 25, 2025 16:59

தமிழகத்திலும் தேர்தல் கமிஷன் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தும் பணியை மேற்கொண்டால் பல அந்நியர்களின் ஓட்டுரிமை நீக்கப்படும்.


Thravisham
ஜூலை 25, 2025 14:15

கொஞ்சம் கண்ண விரிச்சிப் பாருங்க பின் லாடன் கிட்ட கூட திருட்டு கழகத்தின் உறுப்பினர் கார்ட் இருந்தாலும் ஆச்சிரியமில்லை. அன்வர் ராஜா கிட்ட கேட்டுப் பாருங்க


Guru
ஜூலை 25, 2025 17:25

உண்மை.விசாரித்தால் தெரியும்.


Anonymous
ஜூலை 25, 2025 13:52

இது என்ன பிரமாதம், போக போக இதுக்கு மேல பெசல் ஐட்டம் எல்லாம் வரும், என்ன , தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை, அவ்வளவு தான்.


Madras Madra
ஜூலை 25, 2025 12:35

ஆதார் வழங்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் இன்னும் கடினப்படுத்தப்பட வேண்டும்


Anand
ஜூலை 25, 2025 12:33

விரைவில் அயலக அணியின் முக்கிய பொறுப்பேற்கவிருந்த நிலையில்.....


சாமானியன்
ஜூலை 25, 2025 12:32

தேர்தல் கமிஷன் பீகாரில் எடுத்த நடவடிக்கை போன்று தமிழகத்திலும் நடவடிக்கை எடுத்து போலி வாக்காளர்களை களைய வேண்டும். இங்கே திமுக நிறைய தேச விரோத காரியங்களில் ஈடுபட்டிருக்கு.


Ramesh Sargam
ஜூலை 25, 2025 12:19

முகமது அர்ஷத்தை இன்று நாடுகடத்தியதுபோல, அன்று அந்த ஓங்கோல் குடும்பத்தினரை நாடுகடத்தியிருந்தால், இன்று தமிழகம் மிக மிக சுபிட்சமாக இருந்திருக்கும். தவறு செஞ்சிட்டேயே கோபாலு.


Rathna
ஜூலை 25, 2025 12:17

மர்ம நபர் என்றால் வெளியே ஒரு தொழில் உள்ளே ஒரு தொழில். வெளியே சட்டப்படி வியாபாரம். வெளியே போதை, ஹவாலா போன்றவை. பிரச்சனை வந்தால் கள்ள தோணி இருக்கவே இருக்கு.


Ramesh Sargam
ஜூலை 25, 2025 12:17

முகமது அர்ஷத் போன்று பலர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும்.


M Ramachandran
ஜூலை 25, 2025 12:00

சமூக விரோதிகளின் கூடாரம் தீ மு க்க.அது மட்டுமல்ல வங்காள தேச தேச விரோதிகளுடன் ஒட்டு பிச்சையக்கு கை கோர்க்கும் மம்தா பேனர்ஜி மற்றும் ஸ்டாலின். உதாரணம் திருப்பூர் கோவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை