உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் தி.மு.க., அமைச்சர்கள் சிக்குவர்: நாகேந்திரன்

கரூர் சம்பவத்தில் தி.மு.க., அமைச்சர்கள் சிக்குவர்: நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கரூர் சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க., அமைச்சர்கள் விரைவில் சிக்குவர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பேசினார்.'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணம் சென்னை, கொடுங்கையூரில் நேற்று இரவு நடந்தது.தி.மு.க., பெயர் பொதுக்கூட்டத்தில், பா.ஜ., பிரசார பாடல் 'சிடி'யை, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட, நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.பின், நாகேந்திரன் பேசியதாவது:பாக்ஸ்கான் நிறுவனத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என, யாரோ பெற்றெடுத்த குழந்தைக்கு, தி.மு.க., பெயர் வைக்கிறது. அதை, பாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது.காவல்துறை கடமை சட்டசபையில் கரூர் சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடுத்த விளக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளன. பகல் 12:00 மணிக்கு வரவேண்டிய த.வெ.க., தலைவர் விஜய், இரவு 7:00 மணிக்கு வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.'பாட்டிலுக்கு 10 ரூபாய்' என, விஜய் பாட்டு பாடியதும், ஜெனரேட்டர் இணைப்பு துண்டானது; செருப்பு வீச்சு நடந்தது; லத்தி சார்ஜ் நடந்தது.இதற்கு முன் விஜய் சென்ற எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை; கரூரில் மட்டும் எப்படி நடந்தது?மருத்துவமனையில், 52 பேர் அனுமதிக்கப்பட்டனர். முதல்வரோ, 200 பேர் என்றார். அவரது கருத்து முன்னுக்கு பின் முரணாக உள்ளது.'ஒரு ஆளுக்கு பிரேத பரிசோதனை செய்ய, ஒரு மணி நேரம் ஆகும். ஆனால், அவ்வளவு விரைவாக எப்படி செய்தீர்கள்' என, உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. உச்ச நீதி மன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. விரைவில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குவர்.பெண்கள் குறித்து, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட பலரும் இழிவாக பேசி வருகின்றனர்.பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளன.மத்திய அரசு எதையுமே செய்யவில்லை என கூறுகின்றனர். துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இரண்டடுக்கு மேம்பாலம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மெட்ரோ ரயில் பணிகள், 8,184 கோடி ரூபாயில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mario
அக் 16, 2025 09:36

நாலரைக்கோடிக்கு சிக்குவர்


SIVA
அக் 16, 2025 09:13

எப்படியும் எல்லா வழக்குகள் போன்று இதிலும் ... இன்றைய இளைஞர்களை நினைத்தால் ஒரு விதத்தில் கவலையாக உள்ளது, இந்த TVK கட்சி தீயமூக சொல்லும் அணைத்து கருத்துக்களையும் சரி என்று சொல்கின்றது, நீட் இந்தியாவே ஏற்று கொண்டு விட்டது அதை தடுக்க உச்ச நீதி மன்றம் தான் ஒரே வழி. ஹிந்தி கற்றுக் கொள்வதால் நமக்கு நன்மை கிடைப்பதற்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது அது இந்த தற்குறி TVK வருங்கால அடிமைகளுக்கு என்றும் புரிய போவது இல்லை, இந்த அரசியல்வியாதிகள் எல்லாம் ஒரே இனம், ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே மொழி இது நமக்கு புரிவதற்குள் நமக்கு ஆயுள் முடிந்து விடும் புரிந்தாலும் மனம் ஏற்காது .....


VENKATASUBRAMANIAN
அக் 16, 2025 08:15

முதலில் மக்களுக்கு உங்கள் திட்டங்களை புரிய வையுங்கள். அதை விட்டு தவெக பற்றியே பேசி பேரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.


M.Sam
அக் 16, 2025 08:05

ஊசிமணி உண் ஆசை நிறை வராது பொய் ஓரமாக உக்கார்ந்து பலன் போடு வந்துட்டாரு திராவிடத்தை அளிக்க போவியா


Mariadoss E
அக் 16, 2025 07:08

வந்திட்டாருப்பா சிபிஐ director......


vivek
அக் 16, 2025 07:25

அதை சொல்ல வர்றார் ஒரு திராவிட இருநூறு கொத்தடிமை


Vasan
அக் 16, 2025 05:40

Govt helped the affected families by conducting post mortem over night and also to cremate the bodies early morning itself. The Medical team from neighbouring districts helped to do this Himalayan task. Chief minister himself has visited overnight and handed over compensation amount to the affected families. Govt has handled the crisis very well. Now SOP has to be framed, which should be strictly adhered by all political parties, to avoid such mishap in future.


vivek
அக் 16, 2025 06:26

good at making jaalras ....hope he got 300 extra


pakalavan
அக் 16, 2025 05:38

நாலுகோடி நயனார், உனக்கு என்ன தகுதி இருக்கு ?


vivek
அக் 16, 2025 06:25

பகலவனுக்கு இனி இருண்ட காலம் தான்....திராவிட சொம்பே


Palanisamy Sekar
அக் 16, 2025 06:52

நான்கரை லட்சம் கோடி கடனாக வாங்கி தமிழகத்தையே சுரண்டிய கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கி பிழைக்கும் உன்போன்ற அடிமைப்புத்தி ஜென்மங்கள் இனியாவது திருந்த பாருங்கள்


நிவேதா
அக் 16, 2025 04:50

போலீசார் அடித்தே கொன்றனர் என்று சொன்ன உங்களுக்கும் அதில் பங்குள்ளதா என்பதையும் சிபிஐ விசாரிக்கும் என்று பார்ப்போம்


Kasimani Baskaran
அக் 16, 2025 03:41

திராவிட மயமாக்கப்பட்ட பாஜக மிதவாதக்காட்சி போல தெரிகிறது. திராவிடத்தை அடிப்பது போல நடித்து அடிக்க மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை