உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது

பெண்ணுக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ.,வின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.18 வயதுடைய பட்டியலின பெண்ணை டாக்டருக்கு படிக்க வைப்பதாக சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ,35, மருமகள் மார்லினா,31 ஆகியோர் ஆசை காட்டி உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ccpe9drw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், தாங்கள் வசித்து வரும், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்தி உள்ளனர். இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து, இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், காயங்கள் குறித்து டாக்டர்களிடமும் அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா மீது, பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் சிக்கிய இருவரும், வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்தனர்.அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆன்ட்ரோ, மார்லினாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Anbuselvan
ஜன 26, 2024 08:45

ஆச்சர்யமாக இருக்கிறது. சாதாரண விசாரணைக்கு கூப்பிட்டாலே வட்டம் மாவட்டம் னு நெருக்கடி இருக்குமே. இது எப்படி. எதிர் கட்சிக்கும் ஆளுநருக்கும் பதில் அளிக்க வேண்டுமோ. அது சரி. பாட்டிலியின காப்பாளர் திரு தொல் திருமா அவர்கள் எங்கு சென்றார் இப்போது. நடந்த கொடுமை ஒரு பாட்டிலியன பெண்ணுக்கு தானே. வடிவேலு ஒரு படத்தில் சொல்கிற மாதி அது வேற வாயோ


D.Ambujavalli
ஜன 26, 2024 06:15

‘அடிக்கிறாப்போல அடிக்கிறேன், அழறாப்போல அழு’ என்ற வகையில் வழக்குப் பதிவு இன்று கைது, நாளை ஜாமீன், மறுநாள் விடுதலை என்று கேஸ் முடிக்கப்படும் அல்லேலுயா


ரமேஷ்VPT
ஜன 26, 2024 04:01

இந்த மாதிரி அயோக்கியர்களுக்கு கடுமையான தண்டனை வித்திக்கவேண்டும்.


DARMHAR/ D.M.Reddy
ஜன 31, 2024 00:02

என்னதான் வசைமாரி பொழிந்தாலும் பொது மக்கள் காரி உமிழிந்தாலும் இந்த எருமை ,மாட்டு ஜன்மங்களுக்கு நல்ல புத்தி வராது.


நரேந்திர பாரதி
ஜன 26, 2024 03:16

எங்கத்த கைது?? கைது செய்ய சொல்லி, அன்றைய தினமே ஜாமீனில் விட்டாச்சு...திருட்டு திராவிடியா கும்பல்


தாமரை மலர்கிறது
ஜன 26, 2024 03:05

இந்த சம்பவத்தின் மூலம் திமுகவினரின் தரத்தை மக்கள் தெரிந்துகொண்டு விட்டனர்.


Ramesh Sargam
ஜன 26, 2024 00:11

தவறு செய்ததால்தான் அவர்கள் தப்பி ஓடி ஆந்திராவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் இருவரையும் முறைப்படி, எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லாமல் விசாரித்து, மீண்டும் எங்காவது தப்பி ஓடுவதற்குள் சிறையில் அடைக்கவும்.


panneer selvam
ஜன 25, 2024 23:45

Arrest is just a formality and they will get royal treatment under police custody and by tomorrow , they will get bail . Thiruma ji will appreciate Stalin government for their quick action. This drama will be die down in couple of weeks.


Kannan
ஜன 25, 2024 23:09

BJP மட்டுமே அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க போராட முடியும்


vns
ஜன 25, 2024 22:09

கைது செய்து விட்டுட்டாங்களா?


NicoleThomson
ஜன 25, 2024 22:06

இதுவும் ஓங்கோல் பார்ட்டிகளா? கார்பொரேட் கம்பெனி முழுதும் தெலுங்கு பேசும் மக்கள் தானோ? அப்போ தமிழர்கள் தலைக்கு வட்டமாய் தொப்பியை மாற்றிவிட்டது?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை