உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆண்டாள் வேடத்தில் தி.மு.க., - எம்.பி., தமிழச்சி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

ஆண்டாள் வேடத்தில் தி.மு.க., - எம்.பி., தமிழச்சி; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஹிந்து தெய்வங்களை கேலி செய்தபோது, அமைதி காத்த தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, இப்போது ஆண்டாள் வேஷம் போடுகிறார்' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிப்போம், சனாதனம் என்பது, கொசு, டெங்கு, மலேரியா போன்றது, என்றெல்லாம் பேசி, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, தன்னை ஆண்டாள் கோலத்தில் அலங்கரித்து, 'இன்ஸ்டாகிராமில்' படம் வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5p2zrfy8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் தாயாரை இழிவுபடுத்தி பேசியபோது, ஆண்டாள் வேட தமிழச்சி எங்கே போனார்? கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழக பேச்சாளர்கள், ஹிந்து சமய தெய்வங்களை, நம்பிக்கைகளை மட்டும் குறிவைத்து, இழித்து பழித்து, கேலி கிண்டல் செய்து, அவமதித்து பேசியபோது, அமைதி காத்த தமிழச்சி, இன்று ஆண்டாள் வேஷம் போடுவது ஏன்? யாரை ஏமாற்ற இப்படியெல்லாம் வேஷம் தரிக்கிறார். விரைவில், முஸ்லிம் பெண்மணி வேடம் அணிந்தும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கோலத்திலும், தன்னை அலங்கரித்து, படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம். ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு போர்வையில் ஹிந்து தர்மத்தை அழிக்க முயலுவதும் இன்னொரு பக்கம் கடவுள் ஆண்டாள் வேடமிட்டு, தன்னை கடவுளாக காட்டிக் கொள்ள முயலுவதுமாக அவர் போடும் இரட்டை வேடத்தை தமிழர்கள் ரசிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

SRP Jaya Kumaar
டிச 23, 2025 13:12

என்னங்கடா இது? திராவிட மறுப்பு கொள்கையோடு தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்றாங்கன்னு ஒரு பக்கம் குதிக்கறீங்க. மறுபக்கம் ஆண்டாள் வேடம் போட்டா, நீங்க எப்படி ஆண்டாள் வேடம் போடலாம்னு குதிக்கறீங்க. ஆர்.எஸ்.எஸ் இஷ்டத்துக்கு நீங்க வேணும்னா ஆடலாம் அர்ஜுன் சம்பத் அவர்களே. அவங்க ஆட மாட்டாங்க. மனைவி துர்கா சாமி கும்பிடறதை, ஸ்டாலின் தடுக்கலையே நம்பிக்கை இருக்கிறவங்க கும்பிட்டுட்டு போங்கன்னு விட்டுட்டாங்களே.


S.jayaram
டிச 18, 2025 18:53

இதை சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை இந்து என்பவன் நிச்சயம் திமுகவில் இருக்க முடியாது அப்படி இருக்கிறான் என்றால் அவன் நிச்சயம் கலப்பினமாகத்தான் இருப்பான்


GoK
டிச 18, 2025 15:50

வேடம் போட்டு நாடகம் ஆடுவதில் திராவிட மட்டைகளை மிஞ்ச முடியாது. பேரில் வைரம் நடத்தையில் கரியை விட மோசமான கால்வருடி எங்கே?


Mahendran Puru
டிச 18, 2025 15:24

இந்து என்று ஏன் இந்துத்வவாதி பெயர் வைக்கிறான்? சமுதாய நல்லிணக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் கூட்டம்.


raja
டிச 18, 2025 15:22

ஆண்டாள் ஆகவா தெரிகிறார்... எனக்கென்னவோ தேவர்கெளுக்கெல்லாம் அடியார் ஆக தோன்றுகிறார்... புரிந்தவன் புத்திசாலி...


surya krishna
டிச 18, 2025 14:28

திருட்டு திராவிடம் தேர்தல் வந்தாலே நாடகம் ஆடும். இந்துக்கள் யாருமே இல்லை நம்ப வேண்டாம். இவர்கள் இந்து விரோதிகள் இந்துக்களின் ஒரு வாக்கு கூட இவர்களுக்கு விழுக க்கூடாது.


ramesh
டிச 18, 2025 13:48

பிஜேபி காரனுக்கு மட்டும் தான் இந்து கடவுள்கள் சொந்தமா ? நீங்கள் கட்சி நடத்துகிறீர்களா . அல்லது இந்து கடவுள்களை உரிமை கொண்டாடுகிறீர்களா ? உங்களுக்கு அந்த உரிமையை யார் கொடுத்தார்கள் ? இப்போது இங்கே கருத்து போடும் சங்கி கூட்டம் 200 ரூபாய் ஓசி பிரியாணி என்று ஊளையிட்டு கொண்டு வரும் . ஏன் என்றால் இவர்களுக்கு சொந்தமாக இதை தவிர ஒரு கருத்தும் போட தெரியாது


Skywalker
டிச 18, 2025 15:43

DMKs BASIC IDEOLOGY ITSELF IS ANTI HINDUISM, PONMUDI, VEERAMANI, VAIRAMUTHU, PERIYAR, ETC ALL OF THEM HAVE SPOKEN ILL OF HINDUISM MANY TIMES, SO YOU HAVE LOST THE RIGHT TO CLAIM HINDUISM UNLESS YOU APOLOGISE AND RENOUNCE PERIYARISM, OTHERWISE YOU HAVE NO RIGHT TO SAY OR DO ANYTHING RELATED TO HINDUISM


ஆசாமி
டிச 18, 2025 16:40

யோவ். திராவிஷம் கடவுள் மறுப்பு கொள்கையுள்ள கட்சி. அங்க அங்கம் வகிச்சு எதுக்கு கடவுள் வேசம். கேவலம்


ramesh
டிச 19, 2025 10:01

இப்போது பிஜேபி ஆட்சிக்கு வந்து 12 வருஷமாக தானே இந்து இந்து என்று குதிக்கிறாய். 1977 இல் இந்தியாவில் ஜனசங்கம் என்ற பெயரிலிருந்து 1980இல் பிஜேபி ஆகி கிட்ட தட்ட 45க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகி விட்டது. அப்போது அந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே போய் இருந்தீர்கள். அப்போது பிஜேபி க்கு எதிராக ADMK மற்றும் காங்கிரஸ்க்கு ஒட்டு போட்ட கூட்டம் தானே நீங்கள்


ramesh
டிச 19, 2025 10:24

நானும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிஜேபியின் தீவிர ஆதரவாளராக இருந்தவன் தான் . எனக்கு இந்தியாவில் உள்ள தலைவர்களில் மிகவும் பிடித்தவர் ரத யாத்திரை நடத்தி கட்சியை முதல் முதலாக ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய அத்வானி அவர்கள் தான் . வாஜிபாயை விட அத்வானியை மிகவும் விருப்புபவன் நான் . ஆனால் என்று அத்வானி அவர்களுக்கு மரியாதை தரப்படாமல் விடப்பட்டாரோ அன்று தான் நானும் மாறினேன் . இப்போதும் எனக்கு நாட்டில் வும் பிடித்த கட்சி பிஜேபி பிஜேபி தான் . ஆனால் அத்வானி ஓரம் கட்ட பட்டதால் தான் தான் அதற்க்கு காரணமானவர்கள் மீது எனக்கு எதிரான மன நிலை ஏற்பட்டது .


raju
டிச 18, 2025 13:21

ஏங்க ..இந்து மதம் மற்றவர்கள் வேஷம் தரிப்பதில் வளர்வதுமில்லை .. வாழ்வதுமில்லை . நீங்க ஏன் இதை பொறுப்படுத்துகிறீர்கள். நீங்கள் தான் ஹிந்து மதத்தின் மீதுஉ தேவை இல்லாமல் வெறுப்பை வளர்கிறீர்கள் . நமது மதத்தை இழிவு செய்யவில்லை என்றல் நாம் ஏன் அதை பற்றி பேச வேண்டும்


RAMESH KUMAR R V
டிச 18, 2025 12:30

வேடம் நாடகம் இவைகளை கொண்டு நாட்டை ஏமாற்ற முடியாது. மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.


ponssasi
டிச 18, 2025 12:09

இவர்கள் எதோ உள்குத்து நடத்துகிறார்கள். எதோ தவறை மறைக்க அல்லது எதோ ஒரு பிரச்சனையை திசைதிருப்ப போடப்படும் வேடமே இது. மக்கள் வாக்களிக்கும்வரை கவனத்துடன் இருந்து வாக்களிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை