உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் குடும்பத்தை விமர்சித்தவருக்கு மரியாதையா; தி.மு.க.,வினர் கொந்தளிப்பு

முதல்வர் குடும்பத்தை விமர்சித்தவருக்கு மரியாதையா; தி.மு.க.,வினர் கொந்தளிப்பு

திருச்சி: 'முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன் ஆகியோருக்கு டாஸ்மாக் ஊழலில் பங்கு போகிறது' என விமர்சனம் செய்து வரும் தி.மு.க., - எம்.பி., சிவாவின் மகன் சூர்யாவுக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து மரியாதை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க.,வின் ராஜ்ய சபா எம்.பி.,யான சிவாவின் மகன் சூர்யா. தி.மு.க.,வில் இருந்த இவர், பா.ஜ.,வுக்கு தாவினார். ஒருகட்டத்தில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இருந்தபோதும், ஆளுங்கட்சியான தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுப்பதை வாடிக்கையாக்கி உள்ளார்.சமீபத்தில் தனியார் யு டியூப் சேனலுக்கு சூர்யா அளித்த பேட்டியில், 'டாஸ்மாக்கில் நடந்திருப்பது 50,000 கோடி ரூபாய்க்கான ஊழல். இப்படி கிடைத்த தொகை, முதல்வரின் குடும்பத்துக்கு சென்றுள்ளது.'முதல்வர் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோருக்கும் சென்றுள்ளது. இவர்களுக்கெல்லாம், அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும்' என விமர்சித்து கூறியிருந்தார்.இந்த பேட்டி, ஆளுங்கட்சியினரை எரிச்சலுக்குள்ளாக்கியது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தஞ்சையில் நடந்த தனியார் விழா ஒன்றில் சூர்யா பங்கேற்றார். அதே விழாவில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த தஞ்சை எம்.பி., முரசொலி, மேயர் ராமநாதன் ஆகியோர், சூர்யாவுக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு தொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் பரவியது.இது, தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை