உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., ஆதரவு தேவை என்றால் முதல்வர் அரவணைப்பார்!

பா.ஜ., ஆதரவு தேவை என்றால் முதல்வர் அரவணைப்பார்!

சென்னை: “பா.ஜ., ஆதரவு தேவை என்றால் அரவணைப்பர்; தேவையில்லை என்றால் திட்டுவர்,” என, தி.மு.க.,வை விமர்சித்தார் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா.அவர் கூறியதாவது:ஆளுங்கட்சியினருக்கு பா.ஜ., ஆதரவு தேவை என்றால் அரவணைப்பர். தேவையில்லை என்றால், என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ, அதையெல்லாம் சொல்லி திட்டுவர். தேர்தலுக்கு முன்ஒரு நிலைப்பாடு; வெற்றி பெற்ற பின் ஒரு நிலைப்பாடு எடுப்பதுதான் திராவிட மாடல் அரசு.கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், மகன் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதிலும் மட்டுமே முதல்வர் கவனம் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்; இது எந்த வகையில் நியாயம்?பட்ஜெட்டில் தமிழகத்துக்கு முறையாக பணம் ஒதுக்கவில்லை எனக் கூறி, 'நிடி ஆயோக்' கூட்டத்திற்கு செல்லாமல் முதல்வர் புறக்கணித்தார். இப்போது, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என பேசுகிறார். அப்படியென்றால், தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுத்து விட்டதா?மெட்ரோ ரயில், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் பணிகளால், சென்னையில் சாலைகள் மோசமாக உள்ளன. பருவமழைக்குள் அவற்றை சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இனி என்ன சொல்வார்?

கருணாநிதிக்கு, 100 ரூபாய் நாணயம் வெளியிட்டதற்கு, மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி சொல்கிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராததற்கு, இனி என்ன சொல்வார் என்று தெரியவில்லை. தி.மு.க., - பா.ஜ.,விற்கு கொள்கை மாறுபாடு கிடையாது. எதிர்ப்பது போல எதிர்த்து கொள்வர், அவ்வளவுதான். தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 'கோ பேக் மோடி' என்றனர். இப்போது, வெள்ளை குடையுடன் வரவேற்கின்றனர்.சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MADHAVAN
ஆக 20, 2024 11:03

உன் யோக்கியதை எல்லோருக்கும் தெரிந்ததுதான், அதிமுக கூட கூட்டணி இருக்கும்போது ஒருமாதிரி பேசுவ, அவனுங்க கழட்டிவிட்டவுடன் ஒருமாதிரி பேசுனா, இப்போ உன் மகனுக்கு சீட்டு கொடுத்து கூட்டணி வச்சு காசு வாங்கிட்டு ஒரு மாதிரி பேசுற, உன் பவுசு மக்களுக்கு தெரிஞ்சுதான் உன்ன டெபாசிட் வாங்காம உக்கரவச்சுட்டானுங்க


மேலும் செய்திகள்







புதிய வீடியோ