உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷாவிற்கு எதிராக தி.மு.க., தீர்மானம்: வழக்கு தொடர்வதாக பா.ஜ., அறிவிப்பு

அமித்ஷாவிற்கு எதிராக தி.மு.க., தீர்மானம்: வழக்கு தொடர்வதாக பா.ஜ., அறிவிப்பு

சென்னை: ''அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாழ்வாக பேசியதாக, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும்'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.அவரது பேட்டி:அமித்ஷா பேசியதை திசை திருப்பி, அம்பேத்கரை அவர் அவமதித்து விட்டதாக, தவறான கருத்தை, காங்.,- தி.மு.க., கட்சியினர் நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். இதுவரை அம்பேத்கரின் பெருமைகளை, காங்கிரஸ் கட்சி சீர் துாக்கிப் பார்த்ததில்லை. அவரது நுாற்றாண்டு விழாவை கூட, காங்கிரஸ் ஆட்சியில் நடத்தவில்லை. பா.ஜ., ஆட்சியில் தான், அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டது. அம்பேத்கரின் எந்த அடையாளத்தையும், காங்., கட்சி உருவாக்கவில்லை. அவர் பிறந்த, வாழ்ந்த, தொழில் செய்த இடம், புத்த மதத்திற்கு மாறிய இடம், வெளிநாட்டில் படித்த இடம் ஆகியவற்றை பா.ஜ., அரசு தான், புண்ணிய தலங்களாக மாற்றி உள்ளது. அமித்ஷா பேச்சை திரித்து கூறி, அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.அம்பேத்கர் குறித்து அமித்ஷா தாழ்வாக பேசியதாக, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது, சட்டப்படி குற்றம். இது தொடர்பாக வழக்கு தொடரப்படும். 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து, பல தலைவர்கள் விளக்கிய பிறகும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு எதிராக, தீர்மானம் போடுவது வேடிக்கையான செயல்.தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தில் இணைவதற்கு, எட்டு லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பை, தமிழக அரசு தட்டி பறித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
டிச 23, 2024 08:39

உங்க கும்பலின் திட்ட படி ராகுலை சிறைக்கு அனுப்ப வேண்டும் அத்தகு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு நடக்காத ஒன்றை நடந்ததாக ஜோடித்து ஒரு உறுப்பினரை தலையில் கட்டு போட்டு ராகுல் தள்ளி விட்டதில் அவர் கீழயே விழுந்து அடிபட்டு சீரியஸ் ஆகி கிடப்பது போல பொய் செய்தி பரப்பி ராகுலை சிக்க வைக்க உங்க அராத்து கும்பல் நாடகம் போட்டது அம்பலமாகி நிற்பது ..போயா நீயும் உன் கட்சியும் பொய் பொய் பொய் இதை தவிர ஒரு எதுவும் தெரியாத ஒரு கட்சி என்றால் அது பிஜேபி தான்


Admission Incharge Sir
டிச 23, 2024 10:23

என்ன ப்ரோ உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இல்லையா? ராகுலுக்கெல்லாம் இவ்வளவு மெனக்கெட வேண்டுமா? அவரென்ன அந்தளவுக்கா திறமைசாலி? இரட்டைக் குடியுரிமை ஒன்று போதாதா, பப்புவை பருப்பு கடைய.


Sridhar
டிச 23, 2024 12:24

போயும்போயும்


N Sasikumar Yadhav
டிச 23, 2024 08:26

விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்திருந்த 8 லட்சம் பேரும் திருட்டு திராவிட கட்சிகளுக்குதான் ஓட்டுப்போடுவானுங்க


Vijay
டிச 23, 2024 08:23

முதலில் வழக்கை தொடருங்கள்.


R.RAMACHANDRAN
டிச 23, 2024 07:21

மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் திட்டங்களாக உள்ளன மத்திய மாநில அரசு திட்டங்கள். ஆளும் கட்சிகளின் கைக்கூலிகள் அவற்றை பெருமைப்படுத்தி பேசிக் கொண்டுள்ளனர். வங்கிகள் அவற்றிற்கு கடன் தராததை யாரும் கண்டுகொள்வது இல்லை. உதாரணமாக சூரிய ஒளியில் வீட்டு கூரையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்.இத்திட்டம் பணக்காரர்களுக்காகவே வகுக்கப்பட்டுள்ளது என புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க மின்துறை அமைச்சராகத்தினர்.அவர்களுக்கு 78 ஆயிரம் உடனடி மானியம் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை