உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் வாய்ஸ் எழுப்ப திட்டம்

தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: காங்., செயற்குழுவில் வாய்ஸ் எழுப்ப திட்டம்

தி.மு.க., கூட்டணியில், ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்பது தொடர்பாக, நாளை மறுநாள் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றவும், தனித்தனியே நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, டில்லி மேலிடத்திற்கு அறிக்கை அளிக்கவும், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டமிட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், 'ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகளில் போட்டி' என, தமிழக காங்., முன்னணி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sba7iv80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க., தலைமை சம்மதிக்காவிட்டால், ஆட்சியில் பங்கு தருவதாக கூறும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்., கூட்டணி அமைக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, இதை மறுத்து வருகிறார். இதனால், தி.மு.க., ஆதரவு, விஜய் ஆதரவு என, கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி உள்ளன. அதிருப்தி விஜய் ஆதரவு அணியில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள் என பலர் உள்ளனர். மேலும், தமிழகம் முழுதும் தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ள காங்கிரசாரும், விஜய் ஆதரவு அணி தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட துவங்கி உள்ளனர். இந்நிலையில், வரும் 28ல், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில், 'கூட்டணி ஆட்சி, அதிக தொகுதிகள் குறித்து யாரும் பேசக் கூடாது' என தீர்மானம் நிறைவேற்ற , தி.மு.க., ஆதரவு காங்., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேநேரம், செயற்குழு உறுப்பினர்களிடம், கூட்டணி குறித்து தனித்தனியாக கருத்து கேட்டு டில்லி மேலிடத்திற்கு அறிக்கை அளிக்குமாறு, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் விஜய் ஆதரவு அணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்கிரசில், கூட்டணி முடிவை எதிர்த்து, மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்டோர் தனிக்கட்சி துவங்கியது போல, மாற்று கருத்துக்கு இடம் அளிக்காவிட்டால், தற்போது விஜய் ஆதரவு அணி தலைவர்களாக இருக்கும் சிலர், தங்கள் ஆதரவாளர்களுடன் தனிக்கட்சியை துவங்கவும் ஆலோசனை நடத்துகின்றனர். தி.மு.க., தலைமையின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரசார் பலரும், இந்த முறை கூட்டணி ஆட்சி ஒப்பந்தத்தை காங்கிரஸ் தவறவிட்டால், அதன் பிறகு, கனவிலும் அதை எதிர்பார்க்க முடியாது என கூறுகின்றனர். நெருக்கடி இதனால், வரும் 28ம் தேதி சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில், எந்த கூட்டணியாக இருந்தாலும், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்த, பெரும்பாலான நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். செயற்குழு கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக பொதுவாக கருத்து கேட்டால், விஜயுடன் கூட்டணி சேர வேண்டும் என வலியுறுத்துவோர் குறித்த தகவல்களை, தி.மு.க., கூட்டணியை வலியுறுத்தும் தலைவர்கள், தி.மு.க., மேலிடத்துக்கு கொண்டு செல்லக்கூடும். இதனால், வரும் தேர்தலில், இதே கூட்டணி தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்களை புறக்கணிக்கும் வகையில், தி.மு.க., தலைமை திட்டமிட்டு, அவர்களுக்கு சாதகமான காங்., தொகுதிகளை பறித்துவிடலாம். மேலும், விஜய் ஆதரவு அணியினருக்கு, தி.மு.க., தரப்பில் இருந்து வேறு வகையிலும் நெருக்கடி வரக்கூடும். அதனாலேயே, செயற்குழு கூட்டத்தில் தனித்தனியாக கருத்துக்கேட்பு நடத்த வேண்டும் என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 26, 2025 16:53

ஆளுக்கு ஒரு சிறிய பணப்பையை கொடுத்தாலேயே தடால்னு காலில் உழுந்துடுவாங்க. இவஙக வீரம் நாடறிந்தது. வசூலுக்கு சும்மா வாய்ஸ் எழுப்புவாங்க .


Sainathan Veeraraghavan
செப் 26, 2025 16:11

காங்கிரஸ் உயிர் இழந்து கொண்டு இருக்கிறது. ஜோக்கர் ராகுலை போன்ற தலைவர்கள் இருக்கும்போது காங்கிரஸ் ஒரு நாளும் உருப்பட முடியாது. செல்வப்பெருந்தகை திமுக ஸ்டாலின் தயவால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். செல்வப்பெருந்தகை ஒரு திமுகவின் சொம்பு


M Ramachandran
செப் 26, 2025 15:49

ஒட்டு புல்லு காங்கிரேசே ஆட்சியில் பங்கா இல்லை கொள்ளையில் பங்கா தீர்மானித்து சொல்லுங்கள்.


Thravisham
செப் 26, 2025 14:32

வேட்டி சட்டை விற்பவர்கள் சேர் விற்பவர்கள் 28ம் தேதி அன்று உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது.


ramesh
செப் 26, 2025 12:31

காங்கிரஸ் அதிருப்தி தலைவர் யாருப்பா அது . தலைவர்கள் மட்டுமே உள்ள தொண்டர் இல்லா கட்சி .கதை விட்டாலும் பொருந்த விடணும்


ramesh
செப் 26, 2025 12:28

முதல்வர் பதவி எங்களுக்கு தான் என்று காங்கிரஸ் கேட்கிறது என்றும் செய்தி வரலாம் . கூட்டணி தலைமை கட்சி dmk தலைவருக்கு லாலிபாப் மட்டுமே என்றும் செய்திவரும் .சும்மா சுத்து சுத்துன்னு சுத்தி கொண்டே இருங்க .


rameshkumar natarajan
செப் 26, 2025 11:54

If Congress comes out of DMK Alliance, thats the end of congree in tamilnadu. INC should be thankfull that they are getting MLA/MP seats becaues of DMK. If they want more seats, they should increase their strength . Now, its prudent for them to keep silent.


Bala
செப் 26, 2025 11:24

Best Vijay kooda poona kooda cabinet la change kidaikkum ponga plz


Bala
செப் 26, 2025 11:23

Neenga illama DMK illanu ungalukku yean ennum theriyala ,


முக்கிய வீடியோ