உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வுக்கு பின்னால் தி.மு.க., ஒளியக்கூடாது: விஜய்

பா.ஜ.,வுக்கு பின்னால் தி.மு.க., ஒளியக்கூடாது: விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' ஜாதி வாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது,'' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு. மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு ஜாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது: அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும்.இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும். உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.குறிப்பாக, லோக்சபா தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.எனவே, தமிழக அரசும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். அந்த ஆய்வானது. அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு. மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க., அரசு, பா.ஜ.,வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது.அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 08:52

பாஜகவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அவல நிலைமையில் திமுக இல்லை. திமுகவின் பின்னால் நீ ஆரம்பித்துள்ள தவெக ஒளிந்து கொண்டு இருக்கிறது.


panneer selvam
ஜூன் 17, 2025 22:02

Supreme Court already advised states to eliminate the creamy layer of backward and SC/ST communities on reservation but unfortunately Dravidian Rulers refused to implement with dilly tally responses


சிட்டுக்குருவி
ஜூன் 17, 2025 21:02

ஜாதிவாரி ஒதுக்கீட்டி,கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அங்கேயேதான் இருக்கின்றார்கள் .ஏற்கனவே ஒதுக்கீட்டில் பயன் பெற்று உயர்நிலையில் உள்ளவர்களே திரும்பத் திரும்ப பயன் அடைகின்றார்கள் .அதனால்தான் கடந்த 75 வருடங்களாக ஒதுக்கீடு இருந்தும் மக்களில் பெரும்பாலானோர் பயன் அடையவில்லை .ஒருகுடும்பத்தில் ஒருவர் ஒருமுறை பயன்பெற்றால் அந்த குடும்பத்தை ஒதுக்கீடு பட்டயலில் இருந்து நீக்கவழிவகுக்கவேண்டும் .அப்போதுதான் சமுதாயத்தில் முன்னேற்றம் காணப்படும் .


சகுரா
ஜூன் 17, 2025 20:22

இல்லையே. ஸ்டிக்கர் ஒட்டுவது என்றால் பஜகவிற்கு முன்னால்தானே நிற்க முடியும்?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 17, 2025 20:19

முன்னாடியே இவரு பாஜக பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டாராம். அதைத் தான் சூசகமா சொல்றார்


R S BALA
ஜூன் 17, 2025 20:11

சரிப்பா... என்னையும் PERFORM பண்ணவிடுங்கப்பா.


T.sthivinayagam
ஜூன் 17, 2025 20:02

அப்படியே எடுத்தாலும் எதையாவது சொல்லி திருப்பி அனுப்பிடலாம்


Ramesh.M
ஜூன் 17, 2025 20:02

நீங்க 2026 தேர்தல் முடிந்தவுடன் ஓடி ஒளிய போறீங்க. அதுக்கு ரெடி ஆகா இருங்க Bro......


சோழநாடன்
ஜூன் 17, 2025 19:55

அரசியல் களத்திற்கும் வந்தும் நடிகராகவே விஜய் இருக்கிறார். திரைப்படத்தில் வசம் பேசி நடித்தவர்.... யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையைத் தன் பெயரில் வெளியிட்டு தன்னையும் ஓர் அரசியல்வாதி என்று அறிவித்துக்கொண்டு, திமுகவையும் பாஜகவையும் இணைத்து பேசுகிறார். இவர் பாஜகவின் முகமூடி என்பதுதான் அம்பலமாகி பலகாலம் ஆகிவிட்டது. நடிகர் விஜய் நடிப்பை நிறுத்தி.... சுயமாக சிந்தித்து மக்கள் நலன் கருதி நல்ல அறிக்கைகளை வெளியிட வேண்டும்.. எங்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.


Kumar
ஜூன் 17, 2025 19:06

நல்ல தமிழ் வாழ்க


புதிய வீடியோ