உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு

 பல்லடத்தில் 29ல் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு

சென்னை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் 29ம் தேதி, 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், 'மகளிர் உரிமைத் தொகை', 'கட்டணமில்லா பேருந்து பயணம்', மாணவிகளுக்கு 'புதுமைப் பெண் திட்டம்', வேலைக்கு செல்லும் மகளிருக்கு, 'தோழி விடுதி திட்டம்' உட்பட, தொடர்ச்சியான பல நலத்திட்டங்களை, மகளிர் மேம்பாட்டுக்காக, முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 29ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி தலைமை வகிக்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை