உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.ஆர்., நமக்கு எதிரானது என்பதை தி.மு.க., நிரூபிக்கும்: தங்கத்தமிழ்ச் செல்வன் எம்.பி., நம்பிக்கை

எஸ்.ஐ.ஆர்., நமக்கு எதிரானது என்பதை தி.மு.க., நிரூபிக்கும்: தங்கத்தமிழ்ச் செல்வன் எம்.பி., நம்பிக்கை

உசிலம்பட்டி: 'எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தமிழ்நாட்டுக்கு எதிரானது என தி.மு.க., நிரூபிக்கும்' என தங்கத்தமிழ்ச் செல்வன் கூறினார். உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தை தேனி எம்.பி., தங்கத்தமிழ்ச் செல்வன் திறந்து வைத்தார். நகர் செயலார் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். தங்கத் தமிழ்ச்செல்வன்எம்.பி., கூறியதாவது: பீஹாரில் 62 லட்சம் வாக்குகளை நீக்கினர். பா.ஜ., ஆதரவு பெற்ற அரசுதான் அப்போது அங்கு இருந்தது. தமிழகத்தில் தி.மு.க., அரசு இருக்கிறது. எஸ்.ஐ.ஆரில் முறைகேடு நடந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து கூட்டணி கட்சிகளையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு சொன்ன ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே. உசிலம்பட்டியில் பெரும்பாலான மக்கள் பிழைப்புக்காக பல்வேறு வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பெயர் நீக்கப் படலாம் என்ற கருத்து நிலவுகிறது. தி.மு.க., கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கவனம் செலுத்தி, வாக்காளர்கள் பெயர்களை சேர்க்க நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஒட்டுமொத்தமாக எஸ்.ஐ.ஆர்., தமிழகத்திற்கு எதிரானது என்பதை தி.மு.க., நிரூபிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை