உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி: அண்ணாமலை

தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக முயற்சி செய்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yey9vhws&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது திமுகவின் வழக்கமாகியிருக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ் கலாச்சாரத்தை அழிக்க திமுக செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

பேசும் தமிழன்
ஜன 21, 2024 12:36

தமிழர்கள் விழித்து கொள்ள கூடாது என்பதற்காக தான்.... திராவிடர்கள் என்று கதை கட்டி வருகிறார்கள்.... திராவிட முன்னேற்ற கழகம் எதற்க்கு... பேசாமல் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று பெயரை மாற்றலாம் அல்லவா ???


ramani
ஜன 21, 2024 00:57

தமிழ் தாய்க்கு மரியாதை அவ்வளவுதான் இது திராவிஷ மாடல் ஆயிற்றே


g.s,rajan
ஜன 20, 2024 23:42

Fault Finding Expert.....


g.s,rajan
ஜன 20, 2024 19:49

அது சரி ,இந்தியக் கலாச்சாரம் எப்படி இருக்கு...???


RADE
ஜன 20, 2024 19:27

தமிழ் மூச்சு பேச்சு என்று சொல்லும் வைகோ, எதோ நாட்டு அரசன் போல மிடுக்கு காட்டும் வைர முத்து எல்லாம் எங்கு போனீங்க...


Bala
ஜன 20, 2024 20:48

அவர்களெல்லாம் அந்நிய மதத்துக்கும் மொழிக்கும், திராவிட மாடலுக்கும் அடிமைகளாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ் கலாச்சாரம், தேசியம், தெய்வீகம் போன்றவற்றையெல்லாம் இவர்கள் தொலைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன


பேசும் தமிழன்
ஜன 20, 2024 18:51

உண்மை தான்..... அதனால் தான் தமிழ்... தமிழ்... என்று சொல்லாமல்.... திராவிடம்.... திராவிடம் என்று கதை கட்டி வருகிறார்கள்.


KALIHT LURA
ஜன 20, 2024 18:40

எனக்கு எழுபது வயதாகிறது. இத்தனை வருடம் நம்பாமல் இருந்த இந்த விஷயம் உண்மைதான் என்று நம்ப தோணுகிறது. மாற்றத்தை உண்டு பண்ணிய அண்ணாமலைக்கு நன்றி.


Siva
ஜன 20, 2024 18:37

ஆட்சி அதிகாரம் பெரும்பாலும் தமிழனிடம் இல்லை என்று தெரிந்து கூட பிற மாநில காரனுக்கு ஓட்டு போடும் தமிழன் உள்ள வரை இப்படிதான்.


g.s,rajan
ஜன 20, 2024 18:15

தமிழ்ப் பண்பாடு ...???.


கருத்து சுந்தரம்
ஜன 20, 2024 18:03

கலாச்சாரத்தைக் காக்க திமுக என்ன செய்தது என்று சிட்னி சகோதரர் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ