உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வின் பி-டீம் த.வெ.க., அர்ஜுன் சம்பத் கண்டுபிடிப்பு

தி.மு.க.,வின் பி-டீம் த.வெ.க., அர்ஜுன் சம்பத் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, வளவன்புரத்தில் உள்ள வாராஹியம்மன் கோவிலில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், பஹல்காம் தாக்குதலுக்காக சத்ரு சம்ஹார யாகம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற பின், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:நம் நாடு பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பஹல்காமில் துப்பாக்கி சூடு நடத்தி, அப்பாவிகளை கொன்றுவிட்டு தப்பியோடியவர்களை நம் ராணுவம் வேட்டையாட வேண்டும்.அவர்கள் விஷயத்தில் மனிதாபிமானம் தேவையில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் காஷ்மீர் பகுதியை உடனடியாக மீட்க வேண்டும்.பாகிஸ்தானையும், பயங்கரவாதிகளையும் ஆதரிக்கும் கம்யூ., தலைவர்கள், சீமான், திருமாவளவன் போன்றோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக, நடிகர் விஜய்க்கு தி.மு.க., நிதி உதவி அளிப்பதோடு, ஆதரவாகவும் நடக்கிறது.அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுகளை நடிகர் விஜய் பிரிப்பார் என்ற நம்பிக்கையில் இதை செய்கின்றனர். இதனால், தி.மு.க.,வின் பி-டீமாக விஜய் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை