வருமானத்தில் மட்டுமே தி.மு.க.,வுக்கு குறி!
சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப்பிடித்து, பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது தி.மு.க.,வின் வரலாறு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், கவர்னர் ரவி மீது, மனைவி வாயிலாக விமர்சன நாடக மாடிய, நாகர்கோவில் தி.மு.க., மாநகர இணைச் செயலரான ராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களால், கோழி ராஜன், தடியன் ராஜன் என அழைக்கப்பட்டவர். அவர் மீது பல குற்றச் சாட்டுகள் உண்டு. நாகர்கோவில் சவேரியார் சர்ச்சுக்கு, அரசு ஒதுக்கிய ஒன்றரை கோடி ரூபாய் நிதியை, ராஜன் சுருட்டி விட்டதாகவும், பல சொத்துக்கள் வாங்கியிருப்பதாகவும், புகார் எழுந்து, விசாரணை நடந்து வருகிறது. - அண்ணாமலை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,