உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் செய்பவரா நீங்கள்?... உஷார்!

பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் செய்பவரா நீங்கள்?... உஷார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம்' என சென்னை சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. இதில் சில இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் உள்ளது. இந்நிலையில், பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றை பயனார்களுக்கே தெரியாமல் அவர்களின் போன் வழியாகவே பெற்று, அதை பயன்படுத்தி ஹேக்கர்கள் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை