உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

கவர்னரை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: '' நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக கவர்னரை மாற்ற வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்,'' என தி.மு.க.,வின் சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.இம்மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒரே மதம், ஒரே மொழி ஒரே பண்பாடு, ஒரே உடை ஒரே உணவு என ஒற்றை பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பா.ஜ., பார்க்கிறது. இதற்காகதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளது. காலப்போக்கில் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்கி மாநிலங்களை அழிக்க முயற்சி செய்கிறது.பா.ஜ.,வை பொறுத்தவரை குறுகிய செயல்திட்டமாக இருக்காது. நீண்ட கால செயல்திட்டமாக தான் இருக்கும். தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறுபவர்கள், ஒரே தேர்தல் என்ற நிலையை உருவாக்க நினைக்கின்றனர். இது ஒற்றையாட்சிக்கு தான் வழிவகுக்கும். ஒரே தனி மனிதருக்கு தான் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும்.இது பா.ஜ.,விற்கு கூட நல்லது அல்ல.பிரதமர் மோடி சர்வாதிகாரியாக ஆக்கத் தான் சட்டம் பயன்படும்பா.ஜ., அதற்கு மூளையாக செயல்படும் அமைப்புகள் விரிக்கும் வலைகளில், அரசியல் காரணத்திற்காக ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்து விடக்கூடாது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தரக்கூடாது.பா.ஜ., அரசை ஆதரிப்பது கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான சட்டங்களை ஆதரிக்கக்கூடாது. கூட்டாட்சியை காக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதி வரை எதிர்த்து ஆக வேண்டும். தன்னுடைய செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகளை மெதுவாக சமூகத்தில் விதைக்க பார்க்கின்றனர். அதற்கு துணையாக பல எடுபிடிகளை பேச வைப்பார்கள். மீடியாக்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களை கட்டமைப்பார்கள். அளவில்லாமல் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால், கொச்சைப்படுத்துவார்கள். பா.ஜ.,வின் வாட்ஸ் அப் பல்கலை தீயாக வேலை செய்யும். இதை தாண்டி தான் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.இப்போது கூட இந்திய நாட்டையும், அரசியலமைப்பையும் மக்களாட்சியை மாற்ற வேண்டும் என தி.மு.க., போராடி கொண்டிருக்கிறது. ஆனால், நம்மை அரசியலமைப்புக்கு எதிரானவர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் கவர்னர் ரவி இறங்கி உள்ளார். நான் கவர்னரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர் பேசப் பேசத்தான் நாட்டில் பா.ஜ., அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சேர்கிறது. அவர் பேசப்பேசத் தான் மாநில சுயாட்சியின் முழக்கத்தின் உரிமைகள் புரிகிறது. இன்றைய மாநாட்டில், கட்சியினர், திராவிட இயக்கங்கள் பேசுவதற்கு தூண்டுதலாக இருந்தவர் கவர்னர்.பண்பாட்டு எதிரிகளை கொள்கை எதிரிகளை பார்த்து கொண்டு உள்ளோம். இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. அவர்கள் கருத்தியலாக பேசினால் வெற்றி பெற முடியாது. அதனால் தான் அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கின்றனர். அந்த துரோக கூட்டங்களை துடைத்து எறிய வேண்டும். அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை, நாடு முழுதும் சமூக நீதியை பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.இம்மாநாட்டில், கவர்னருக்கு எதிராகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Veluvenkatesh
ஜன 25, 2025 11:23

ஆமாம் இவர் சொல்வது சரிதான். மத்திய அரசு கவர்னர் மாற்ற வேண்டாம்-தமிழ் மக்கள் இந்த ஊழல் திராவிட ஆட்சியையே 2026ல் மாற்றி விடுகிறோம்.


M Ramachandran
ஜன 23, 2025 03:47

ஆத்தாடி இவ்வாலய பெரிய வசனத்தைய்ய எழுதி கொடுத்தால் எப்படி படிப்பது? எணம்னா தான் காண்ணாடி முன் நின்று நெற்று போட்டலும் பிறகு பார்த்து படித்தாலும் கடினமாக அல்லவா தெரிகிறது. என அப்பா அதனால் முதன் மந்தி ரி பதவி கடினமாக இருக்கும் போல தெரிகிறது


KavikumarRam
ஜன 20, 2025 13:25

குறைந்த பட்ச அறிவு வேண்டும்.


Selvaraj K
ஜன 19, 2025 15:47

ஒரு மாநாடோ அல்லது பொது கூட்டமோ நடத்துன அது படி நடக்கனும் இப்ப நடக்குறது எல்லாம் நேர் மாறா நடக்குது .


Ramar P P
ஜன 19, 2025 10:34

நான் கவர்னரை விமர்சிக்கிறேன் என்பதற்காக பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்று கூறி விட்டு கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது எதற்காக.இப்படி மக்களை குழப்புவது தான் திராவிட மாடல் ஆட்சி.


PAKIR MOHAMED
ஜன 19, 2025 13:56

மாற்று என்றவுடன் மாறிவிடாவபோகிறது அவங்க ஆள் தானை.அவர்கள் தான் அனுப்பி இருக்கிறார்.


S.V.Srinivasan
ஜன 22, 2025 11:00

குழப்பறதுதானே இவரு வேலையே. என்னைக்கு தெளிவா பேசிருக்காரு?


முத்து
ஜன 19, 2025 09:32

அவர் சொல்வது நியாயம் தான். ஆளுநர் மாற்றம் வேண்டாம். ஆட்சியை கலைத்து நல்ல மாற்றம் தாருங்கள்


V வைகுண்டேஸ்வரன்,chennai
ஜன 19, 2025 09:29

நீங்க அவ்ளோ ஒர்த் இல்லை. நாளை நமதே 40 தும் நமதே நாளான்னிக்கும் நமதே 234 லும் நமதே...ஹும் என்ன பிறயோசனம். வட பாண்டா பஜ்ஜி...


veera
ஜன 19, 2025 13:25

officeruku முத்தி போச்சு..ஹி. ஹி


LOTUS BALA
ஜன 19, 2025 09:28

தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த... ய் கலையெல்லாலாம் அரசியல் செய்ய விட்டது. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் இன்று காணாமல் போனார்கள். ஆனால் இவனுக கொள்ளை அடிசுட்டு பேர் வச்சு கொண்டாடுறானுகவிரைவில் அழியும்.


vbs manian
ஜன 19, 2025 09:28

பிரிவினை வாதம் பேசி பேசியே பதவி சுகம் சொத்து அனுபவிப்பது யார் என்று எல்லோருக்கும் தெரியும். ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பம் தாண்டி பரவுமா. மக்கள் மூளை சலவை ஓயுமா.


Dharmavaan
ஜன 19, 2025 09:26

இதை பாணியில் பதில் சொல்லி உணர்ச்சிகளை கிளப்பும் பேச்சாளர்கள் பிஜேபியில் இல்லை அண்ணாமலை இன்னும் ஆக்கிரோஷமாக படத்தில் சொல்ல வேண்டும். சமூக மீடியாக்களில் கருத்து போட்டாலே தண்டனை கொடுப்பவன் மோடி எதேச்சதிகார என்கிறான் இவன் குறிக்கோள் தமிழ் நாட்டை தனி நாடாக்க வேண்டும் இவன் கொள்ளையை /எதேச்சதிகாரத்தை கேட்கக்கூடாது.அதுவே மாநில சுயாட்சி திமுக அழியும் நாளே தமிழ் நாட்டுக்கு நல்ல காலம்


புதிய வீடியோ