உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: தமிழகத்துக்கு வேண்டியதை பா.ஜ.,விடம் கேட்க வேண்டிய நேரம் இது

டவுட் தனபாலு: தமிழகத்துக்கு வேண்டியதை பா.ஜ.,விடம் கேட்க வேண்டிய நேரம் இது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன்: நாம் பல்வேறு வகைகளில், வரியாக 1 ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு, 29 பைசாவை தான் நிதி உதவியாக திருப்பி கொடுக்கிறது. அவர்களது காதை திருகி, நமக்கு உரியதை கேட்க வேண்டிய நேரம் தான், இந்த தேர்தல். அதனால், அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு, அவர்களின் காதை திருகி, தமிழகத்திற்கு வேண்டியதை கேட்க வேண்டும்.டவுட் தனபாலு: இவர் சொல்ற மாதிரியே, பா.ஜ.,வினர் காதை திருகி தமிழகத்துக்கு உரியதை தாங்கன்னு கேட்கலாம்... அவங்களே விரும்பினாலும் தர முடியுமா? தேர்தல் விதிகள் குறுக்கே புகுந்து தடுக்குமே... சினிமா மாதிரியே அரசியலையும் அணுகலாமா என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், 'காஸ் சிலிண்டர் விலையை, 100 ரூபாய் குறைப்போம்' என்று கூறினர்.இதுவரை எதுவும் குறைக்கவில்லை. தற்போது பிரதமர் மோடி தான், சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளார்.டவுட் தனபாலு: நாடு முழுக்கவே காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் குறைக்கப்பட்டிருக்கு... அதே நேரம், 'தி.மு.க., மூணு வருஷமா நிறைவேற்றாத வாக்குறுதியை நாங்க நிறைவேற்றி இருக்கோம்'னு தமிழக பா.ஜ.,வினர் பிரசாரம் செய்வதற்கு இந்த விலை குறைப்பு நன்றாகவே பயன்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்: தேர்தல் நெருங்குவதால், பிரதமர் மோடி காஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றி அறிவித்துள்ளார். மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இல்லை. வந்தால், மீண்டும் விலையை உயர்த்திக் கொள்ளலாம். இல்லா விட்டால், ஆட்சிக்கு வரும் கட்சி தானே கஷ்டப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த சுமை காங்கிரஸ் கட்சி தலையில் விழும்.டவுட் தனபாலு: நீங்க கவலையே பட வேண்டாம்... சிலிண்டர் விலை குறைப்பின் பாரத்தை சுமக்க வேண்டிய நிலை உங்க கட்சிக்கு வரவே வராது... உங்க கட்சிக்கு அந்த சுமையை தருவதற்கு வாக்காளர்களும் தயாராக இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ