| ADDED : அக் 17, 2025 02:22 AM
திராவிடஸ்தான் நாடு
ஜின்னாவிடம் கேட்ட ஈ.வெ.ரா.,
தமிழகம் பிற மாநிலங்களை போல அல்லாத ஒன்று. அதனால் தான் நானோ, சிதம்பரமோ திராவிட கட்சிகளின் ஆதரவின்றி வெற்றி பெற முடியவில்லை. நான் பிறந்த 1941, ஏப்.10ல் வெளியான பத்திரிகைகளில், முக்கியச் செய்தி என்னவென்று பார்த்தேன். அதில், உலக அளவிலான செய்தி, பெல்கிரேடு நகரை ஹிட்லர் ஆக்கிரமித்தார் என்பது. இந்திய அளவிலான செய்தி, சென்னையில் நடந்த முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த முகமது அலி ஜின்னாவை, வரவேற்பு குழு தலைவர் என்ற முறையில் ஈ.வெ.ரா., நேரில் வரவேற்றார் என்பதாகும். பின், அந்த கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ரா., 'பாகிஸ்தான், கட்டாயம் உருவாக வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முழுதுமாக ஏற்கிறேன். தயவு செய்து என் கோரிக்கையையும் ஏற்று கொள்ளுங்கள். இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடஸ்தான் என மூன்றாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும்,' என்றார். இந்த திராவிட சக்திகள், 100 ஆண்டுக்கு முன்பே, வேறு ஒரு வித்தியாசமான இந்தியாவை உருவாக்க விரும்பினர். - மணிசங்கர் அய்யர் முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,