வாய்ப்பை தடுக்கும் திராவிட மாடல்
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். இன்னும் கூட்டணி பலப்படும்; தி.மு.க.,வை வீழ்த்துவோம். அ.ம.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வேறு கட்சியில் சேருகின்றனர். படிப்பதற்கான வாய்ப்பை தடுப்பது, திராவிட மாடலாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படவில்லை. அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன. இது மக்களுக்கு தெரிகிறது. தேர்தலில் பதில் அளிப்பர். அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டில் பங்கேற்போம்.- தினகரன்பொதுச்செயலர், அ.ம.மு.க.,